'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? | அபிநட்சத்திரா நடிக்கும் அன்னம் தொடரின் புரோமோ ரிலீஸ் | கார்த்திகை தீபம் சீரியலிலிருந்து விலகிய அயுப் |
நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான மனோபாலா (69), கல்லீரல் பாதிப்பால் சென்னையில் நேற்று (மே 3) காலமானார். அலங்கரிக்கப்பட்ட பிரத்யேக வாகனத்தில் மனோபாலாவின் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. வளசரவாக்கம் மின் மயானத்தில் வைத்து தகனம் செய்யப்பட்டது.
இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவியாளராக இருந்த மனோபாலா, ஆகாய கங்கை படம் வாயிலாக இயக்குனர் ஆனார். ஊர்காவலன், சிறைப்பறவை, மூடுமந்திரம் உட்பட, 20க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி உள்ளார். சதுரங்க வேட்டை உள்பட மூன்று படங்களை தயாரித்துள்ளார். அரண்மனை, கலகலப்பு, சிறுத்தை உள்பட 300க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி நடிகராக நடித்துள்ளார்.
தமிழ் திரைத்துறையில், இயக்குனர், எழுத்தாளர் சங்கத்தில் செயற்குழு உறுப்பினராக இருந்து வந்தார். இவர் நடத்தி வந்த 'யு டியூப்' வாயிலாக குறும்படங்களை வெளியிடும் திட்டத்தை, கடந்த மாதம் அறிவித்திருந்தார். கடைசியாக, லியோ, சந்திரமுகி - 2 படத்தில் நடித்தார். இவர் தயாரித்த, சதுரங்க வேட்டை 2 படம் இன்னும் வெளியாகாமல் முடங்கிக் கிடக்கிறது. இவர், அ.தி.மு.க., தலைமை கழக பேச்சாளராகவும் இருந்தவர்.
திரையுலகினர் அஞ்சலி
மனோபாலா உடலுக்கு திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்தினர். சாலிகிராமத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு மணிரத்னம், விஜய், அமைச்சரும், நடிகருமான உதயநிதி, அமைச்சர் மா சுப்ரமணியம், பிசி ஸ்ரீராம், மோகன், தாமு, சந்தானபாரதி, ஸ்டன்ட் சில்வா, சித்தார்த், மோகன்ராம், வித்யூலேகா, நட்டி எனும் நட்ராஜ் சுப்ரமணியம், சிவகுமார், கவுண்டமணி, சுசீந்திரன், ஏஎல் விஜய், திரு, சினேகன், கார்த்திக் ராஜா, டெல்லி கணேஷ், சங்கர் கணேஷ், கேஎஸ் ரவிக்குமார், ஏஆர் முருகதாஸ், முரளி ராமசாமி, தினா, பெப்சி தலைவர் ஆர்கே செல்வமணி, ரமேஷ் கண்ணா, ஆர்வி உதயகுமார், பேரரசு, ஹெச் வினோத், ராதாரவி, ஆர்யா, அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பா.ஜ.வின் ஹெச் ராஜா, சுந்தர் சி, எம்எஸ் பாஸ்கர், சசிகுமார், சூரி, ஷங்கர், லோகேஷ் கனகராஜ், சோனா, கோவை சரளா, மன்சூரலிகான், அப்புக்குட்டி, தேமுதிக., சார்பில் பிரேமலதா, சண்முக பாண்டியன், பார்த்திபன், வஸந்த் சாய், சாந்தனு, யோகிபாபு, விஜய்சேதுபதி, சரத்குமார், ராதிகா, ஒய்ஜி மகேந்திரன், மாரி செல்வராஜ், இமான் அண்ணாச்சி, லிங்குசாமி, ஆர்த்தி, கணேஷ், தாடி பாலாஜி மற்றும் சின்னத்திரை நடிகர்கள் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.
பின்னர் காலை 11.30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட பிரத்யேக வாகனத்தில் மனோபாலா உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. வளசரவாக்கம் மின் மயானத்தில் வைத்து அவரது இறுதிச்சடங்குகள் மேற்கொள்ளப்பட்டு தகனம் செய்யப்பட்டது.