மொழி சர்ச்சை... கர்நாடகாவில் வலுக்கும் எதிர்ப்பு : மன்னிப்பு கேட்க முடியாது என கமல் திட்டவட்டம் | 7 ஜி ரெயின்போ காலனி இரண்டாம் பாகம் இந்த ஆண்டு ரிலீஸ் | விஜய் தேவரகொண்டா படத்தால் சூர்யா படத்தை கைவிட்ட கீர்த்தி சுரேஷ் | கூலி படத்தை தொடர்ந்து ஜெயிலர் 2விலும் நாகார்ஜூனா? | ''நான் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன்'': எதை சொல்கிறார் மணிரத்னம்? | இட்லி கடை ரிலீஸ் தேதியில் சூர்யா 45 | தியேட்டரில் வெளியாகும் 'பறந்து போ' | என்னை பற்றிய பதிவுகளை நீக்க வேண்டும்: ஆர்த்திக்கு, ரவி மோகன் நோட்டீஸ் | மீண்டும் இணையும் வடிவேலு - பார்த்திபன் | பிளாஷ்பேக்: பூமியில் வாழ்ந்த கடவுள் 'என்.டி.ஆர்' |
பாரதிராஜாவிடம் உதவியாளராக இருந்தவர்கள் இயக்குனராகி வெற்றி பெற்றுக் கொண்டிருந்த காலத்தில் தொடர்ந்து தோல்வி படம் கொடுத்தவர் மனோபாலா.
மனோபாலா இயக்கிய முதல் திரைப்படமான 'ஆகாய கங்கை' தோல்வியடைந்தது. நடிகர் மோகன் வாய்ப்பு தேடி அலைந்த காலகட்டத்தில் அவருக்கு மிக உதவியாக இருந்தவர் மனோபாலா. அப்போது உச்சத்தில் இருந்த மோகன் தனது நண்பருக்கு படம் நடித்து கொடுக்க முன்வந்தார், அந்த படம் 'நான் உங்கள் ரசிகன்'. இந்த படத்தின் பாடல்கள் ஹிட் ஆனாலும் படம் தோல்வி அடைந்தது.
இரண்டு தோல்விகளால் துவண்டுபோய் இருந்த மனோபாலாவுக்கு 'முதல் வசந்தம்' படத்தை இயக்கும் வாய்ப்பு வந்தது. ஆனால் தோல்வி படம் கொடுத்தவர் தனது படத்தை இயக்கக்கூடாது என்று தயாரிப்பாளர் கருதியதால் வெற்றிப் படங்களை கொடுத்துக் கொண்டிருந்த மணிவண்ணன் அந்த படத்தை இயக்கினார்.
இதனால் விரக்தியின் உச்சிக்கு சென்ற மனோபாலா. திருச்சி வெக்காளி அம்மனிடம் மிக உருக்கமாகக் கடிதம் எழுதி வேண்டுகோள் வைத்தார். அடுத்த படம் தோல்வி அடைந்தால் இங்கு வந்து தற்கொலை செய்து கொள்வேன் என்று அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்ததாக கூறுவார்கள்.
பிரார்த்தனை முடிந்து சென்னை வந்த மனோபாலாவிற்கு போன் செய்த தயாரிப்பாளர் கலைமணி “மோகன் கால்ஷீட் தரேன்னு சொல்லிட்டாரு. ஆனா டைரக்ஷன் நீதான் செய்யணும்னு கண்டிஷனா சொல்லிட்டாரு” என்று சொல்ல, மனோபாலாவிற்கு ஆனந்தக் கண்ணீர். வாய்ப்பு தேடிய காலத்தில் தனக்குப் பல்வேறு விதங்களில் உதவி செய்த மனோபாலாவை மறக்காமல் மீண்டும் ஆதரிக்க முன்வந்தார் மோகன். அப்போது மோகன் பல திரைப்படங்களில் ஹீரோவாக பிஸியாக நடித்துக் கொண்டிருந்ததால் 'இரவு நேரங்களில் நடித்துத் தருகிறேன்' என்று சொன்னார். எனவே இரவுக் காட்சிகள் அதிகம் இருக்குமாறு எழுதப்பட்ட படம்தான் 'பிள்ளை நிலா'.
தன்னுடைய காதல் நிறைவேறாத காரணத்தால் தற்கொலை செய்து கொள்ளும் ஓர் இளம்பெண்ணின் ஆவி, ஒரு சிறுமியின் உடலில் புகுந்து கொண்டு காதலனையும் அவனது குடும்பத்தையும் பழிவாங்க நினைக்கும். அந்த ஆவி புகுந்த சிறுமியாக பேபி ஷாலினி நடித்து அசத்தியிருந்தார். புதுமையான கதையும், இளையராஜாவின் மேற்கத்திய பின்னணி இசையும், ஷாலினியின் மிரட்டலான நடிப்பும் படத்தை வெற்றி பெற வைத்தது. மனோபாலா அதன் பிறகு வெற்றி இயக்குனராக வலம் வந்தார்.