ஒல்லியான நடிகைகள் காணாமல் போய்விட்டார்கள் : உருவகேலியால் இனியா ஆவேசம் | பிளாஷ்பேக் : நடிகராக படம் தயாரித்த சரத்குமார் | பிளாஷ்பேக் : காந்தி பாராட்டிய நடிகர் | 'கேரள ஸ்டோரி 2' படத்திற்கு கோர்ட் நோட்டீஸ் | 2026ன் 3வது நேரடி ஓடிடி ரிலீஸ் 'லக்கி தி சூப்பர்ஸ்டார்' | ஷங்கரின் ‛வேள்பாரி' படத்தில் தனுஷ் நடிக்கிறாரா...? | 'கைதி 2' விரைவில் டீசருடன் அறிவிப்பு | பெங்களூருவின் புகழ் பெற்ற ஊர்வசி தியேட்டர் நிரந்தர மூடல் | காமெடி முதல் கிரைம் த்ரில்லர் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | வாரணாசி-க்கு பின்னணி இசை அமைப்பது எப்போது... : கீரவாணி கொடுத்த அப்டேட் |

பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கத்தில் சூரி நடித்த மாமன் படம் வெற்றி அடைந்துள்ளது. நேற்றுவரை 32 கோடியை தாண்டி வெற்றி படமாகி உள்ளது. இது குறித்து பேசிய தயாரிப்பாளர் தனஞ்செயன், 'உண்மையில் ஆரம்பத்தில் மாமன் படத்துக்கு மீடியாவில் கலவையான விமர்சனங்கள் வந்தது. சென்டிமென்ட் அதிகம் என்றார்கள். ஆனால், அது பற்றி கவலைப்படாமல் படத்தை நன்றாக பிரமோட் செய்தார் சூரி. ஒவ்வொரு ஊராக போய் பேசினார். நல்ல படம் எடுத்து இருக்கிறோம் பாருங்க என்றார். மக்கள் படத்தில் ஏதோ இருக்கிறது என்று வந்தார்கள். படம் இப்ப ஹிட்' என்றார். தனது பணியை நிறைவாக செய்துவிட்ட சூரி, இப்போது குடும்பத்துடன் சிங்கப்பூர், மலேசியா டூரில் இருக்கிறார். ஜூன் முதல் வாரத்தில் அவர் வந்தவுடன் படத்தின் வெற்றி விழா நடக்க உள்ளது. டூரிஸ்ட் பேமிலியை தொடர்ந்து மாமன் படமும், சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்டாலும் கதைக்காக ஓடியது, கோலிவுட்டில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




