பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு |
அறிமுக இயக்குனர் கார்த்திக் தண்டு இயக்கத்தில், அஜனீஷ் லோகநாத் இசையமைப்பில், சாய் தரம் தேஜ், சம்யுக்தா, சுனில் மற்றும் பலர் நடித்து தெலுங்கில் கடந்த ஏப்ரல் மாதம் 21ம் தேதி வெளியான படம் 'விரூபாக்ஷா'. சுமார் 20 கோடி செலவில் தயாரான இந்தப் படம் 80 கோடி வசூலித்து பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.
தெலுங்கில் தயாராகி தமிழில் டப்பிங் ஆகி வெளிவந்து வெற்றி பெற்ற “அம்மன், அருந்ததி” படங்கள் போல பக்தி, மாயாஜால தந்திரம் நிறைந்த படமாக இந்த 'விரூபாக்ஷா' படம் உருவாகி உள்ளது. 1991ல் கதை நடப்பதாகப் படமாக்கப்பட்டுள்ளது.
இம்மாதிரியான படங்கள் தெலுங்கு ரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெறும். அதுபோலவே இந்தப் படமும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழில் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் இப்படத்தை வெளியிட, தமிழ் வசனங்களை பிரபாகர் எழுதியுள்ளார். தெலுங்கில் படம் வெற்றி பெற்றுள்ளதால் நாளை மே 5ம் தேதி படம் வெளியாவதற்கு இரண்டு நாட்கள் முன்பாகவே பத்திரிகையாளர்களுக்கு காட்சியைத் திரையிட்டுவிட்டனர். தெலுங்கைப் போல தமிழிலும் படத்திற்கு வரவேற்பு கிடைக்குமா என்பது நாளை தெரிந்துவிடும்.