குட் பேட் அக்லி டிரைலர் வெளியானது : நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமே...! | ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' |
மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா மற்றும் பலர் நடித்து கடந்த வாரம் வெளியான படம் 'பொன்னியின் செல்வன் 2'. இப்படம் வெளியான இரண்டு நாளில் உலக அளவில் 100 கோடி வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
நேற்று விடுமுறை தினம் என்பதால் மேலும் 50 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இன்றும் விடுமுறை தினம் என்பதால் இன்றைய வசூலும் 50 கோடியைத் தாண்ட வாய்ப்புள்ளது. ஆக, நான்கே நாட்களில் இப்படம் 200 கோடி வசூலைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த வருடம் வெளியான முதல் பாகத்தின் மொத்த வசூல் 500 கோடியைக் கடந்தது. இரண்டாம் பாகத்தின் வசூல் நான்கு நாட்களில் 200 கோடியைக் கடந்தாலும் மேலும் 300 கோடி வசூலைப் பெற்று முதல் பாகத்தின் வசூலை முறியடிக்குமா என்ற எதிர்பார்ப்பு திரையுலகில் எழுந்துள்ளது.
தற்போது கோடை விடுமுறை தினம் என்பதால் குடும்பத்தினருடன் சென்று பார்க்கும்படியாக இப்படம் இருக்கிறது. முதல் பாகத்தைப் பார்க்கத் தவறியவர்களும் இரண்டாம் பாகத்தைப் புரிந்து கொள்ளும் விதத்தில் முதல் பாகத்தின் கதைச் சுருக்கத்தை கமல்ஹாசன் குரலில் இரண்டாம் பாகத்தில் எளிதாகப் புரிய வைக்கிறார்கள்.
இப்படத்திற்கும் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை தியேட்டர்கள் பக்கம் வருவதால் முதல் பாகத்தைப் போலவே வசூல் சாதனை புரியும் என்றே நம்புகிறார்கள்.