சனாதன தர்மம் இளைஞர்களிடம் போய் சேரணும் : சென்னையில் நடிகர் பாலகிருஷ்ணா பேச்சு | ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இணைந்த மோகன்லால் | கல்கி 2898 ஏடி 2 படம் : தீபிகாவிற்கு பதில் பிரியங்கா சோப்ரா | மீண்டும் சுதா இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் | ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம் ஓ சுகுமாரி | குட் பேட் அக்லி... இளையராஜா பாடல் விவகாரம் : மனு தள்ளுபடி | நடிகர் திலீப்பின் ராசி... தர்ஷனுக்கும் கை கொடுக்குமா? டிசம்பர் 11ல் தெரியும் | மோகன்லாலை மீண்டும் இயக்கும் தொடரும் பட இயக்குனர் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | ஜெயிலர் 2விலும் தொடர்கிறார் விநாயகன் | ‛பார்டர் 2'வில் தில்ஜித் தோசன்ஜ் முதல் பார்வை வெளியீடு |

தமிழ் சினிமாவில் பல்வேறு சங்கங்கள் இருந்தாலும் அதில் முக்கியமானது தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் இருக்கிறது. தயாரிப்பாளர்கள் இடையே மூன்று சங்கம் உள்ளது. இருப்பினும் இந்த சங்கம் தான் எல்லாவற்றிலும் பிரதானமாக முன்னிலை வகிக்கிறது.
இந்த சங்கத்திற்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறுகிறது. 2023-26ம் ஆண்டுக்கான தேர்தல் நேற்று சென்னையில் நடந்து முடிந்தது. இதில் தற்போதைய தலைவராக உள்ள தேனாண்டாள் முரளி தலைமையிலான தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணியும், மன்னன் தலைமையிலான தயாரிப்பாளர்கள் உரிமை காக்கும் அணியும் களமிறங்கினர்.
முரளி தலைமையிலான அணியில் தலைவராக தேனாண்டாள் முரளி, துணைத் தலைவர்களாக லைகா தமிழ்க் குமரன், அர்ச்சனா கல்பாத்தி போட்டியிட்டனர். செயலாளர் பதவிக்கு ராதாகிருஷ்ணன் மற்றும் கதிரேசனும், பொருளாளர் பதவிக்கு சந்திரபிரகாஷ் ஜெயின், இணைச் செயலாளர் பதவிக்கு சவுந்தரபாண்டியன் போட்டியிட்டனர்.
அதேப்போன்று மன்னன் தலைமையிலான அணியில் தலைவராக மன்னனும், துணைத் தலைவர்களாக மைக்கேல் ராயப்பன் மற்றும் விடியல் ராஜூ போட்டியிட்டனர். செயலாளர்களாக கமீலா நாசர், தேனப்பன், பொருளாளராக ரவீந்தர், இணை செயலாளராக மணிகண்டன் ஆகியோர் போட்டியிட்டனர்.
நேற்று நடைபெற்ற தேர்தலில் 1406 பேர் ஓட்டளிக்க தகுதியான வேட்பாளர்கள். அதில் 1111 ஓட்டுகள் பதிவானது. ஓட்டு எண்ணிக்கை இன்று காலை சென்னை அடையாறில் உள்ள மகளிர் கல்லூரியில் காலை 10 மணிக்கு துவங்கியது. ஓய்வுபெற்ற நீதிபதிகள் வெங்கட்ராமன் மற்றும் பாரதிதாசன் தலைமையில் இந்த ஓட்டு எண்ணிக்கை நடந்தது.
இதில் தலைவராக போட்டியிட்ட முரளி ராமசாமி வெற்றி பெற்று மீண்டும் தலைவராக பொறுப்பேற்க உள்ளார். இவர் 615 ஓட்டுகள் பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட மன்னன் 482 ஓட்டுகள் பெற்றார்.
இதேப்போன்று முரளி அணியில் போட்டியிட்ட சந்திரபிரகாஷ் ஜெயின் பொருளாளராக வெற்றி பெற்றுள்ளார். செயலாளர் பதவிகளுக்கு போட்டியிட்ட ராதாகிருஷ்ணன், கதிரேசனும் வெற்றி பெற்றுள்ளனர். முக்கிய பொறுப்புகளில் முரளி ராமசாமி அணியை சார்ந்தவர்களே முன்னிலை வகிக்கின்றனர்.