மீண்டும் சிவகார்த்திகேயனிடம் கதை சொன்ன ஏ.ஆர்.முருகதாஸ் | பைசன் படத்தின் 2வது பாடல் வெளியானது | ‛யாத்திசை' இயக்குனருடன் இணையும் ரவி மோகன் | பிளாஷ்பேக்: பாலுமகேந்திரா ஓவியமாய் தீட்டிய முதல் திரைக்காவியம் “கோகிலா” | அக். 10ல் ஒளிபரப்பாகும் ‛வேடுவன்' வெப் தொடர் | மதராஸி ஓடிடி வெளியீடு எப்போது | சிம்புதேவன் இயக்கத்தில் விமல்? | 21 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ-ரிலீஸ் ஆகும் அட்டகாசம் | ‛சூர்யா 46' படத்தின் ஓடிடி உரிமம் இத்தனை கோடியா? | வேறொருவரை வைத்து தெலுங்கு டப்பிங்: 'கிஸ்' இயக்குனர் மீது விடிவி கணேஷ் அதிருப்தி |
விக்ரம் படத்தின் மிகப் பெரிய வெற்றிக்கு பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் லியோ. த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், மிஷ்கின் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
சமீபத்தில் ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மிஷ்கின் லியோ படத்தை குறித்து பகிர்ந்துள்ளார். அதன்படி, லியோ திரைப்படம் அருமையாக வந்துள்ளது. இந்த படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நான் நடித்துள்ளேன். நீண்ட வருடங்களுக்கு பிறகு விஜய்யுடன் இணைந்து நடித்தது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. இப்போது வரை அவர் மாறவில்லை. இன்னும் அதே அன்பு உள்ளது. விஜய், லோகேஷ் இணைந்தால் அது அதிரடியான ஆக்ஷன் படமாக தான் அமையும்" என தெரிவித்துள்ளார்.