ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி | கலாபவன் மணியின் கனவை நனவாக்கிய மகள் | பேட்ரியாட் படத்தை திரையிடுவதில் கேரள திரையரங்குகள் திடீர் போர்க்கொடி | ஆக்ஷன் மோட் ஆன் : துரந்தர் 2 டிரைலர் வெளியானது | திருமணத்திற்கு ஜோடியாக வந்ததற்கு பதிலடிதான் சங்கீதாவின் புதிய மனு ? | சிரஞ்சீவி, கமல் உள்ளிட்டோருக்கு 2025ன் தெலங்கானா மாநில சினிமா விருதுகள் அறிவிப்பு | 'மேட் இன் கொரியா' இயக்குனர் மனைவியின் கதை : பிரியங்கா மோகன் | இசையில் மட்டும்தான் கவனம்: நடிப்பு தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்த சாய் அபயங்கர் | ப்ளடி பாலிட்டிக்ஸ் : கொடி கம்ப அரசியல் | சந்தானம் ஜோடியான கோபிகா ரமேஷ் |

தற்போது விஜய் நடித்து வரும் லியோ படத்தை செவன் ஸ்கிரீன் லலித் குமார் தயாரிக்க, லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். விஜய்யுடன் திரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், மிஷ்கின், கவுதம் மேனன் உட்பட பலர் நடித்து வரும் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு மே 5ம் தேதி மீண்டும் தொடங்க உள்ளது. மேலும் இந்த படத்தில் ஏற்கனவே லோகேஷ் கனகராஜின் எல்.சி.யு இணையும் என்று விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள். குறிப்பாக கார்த்தி நடித்த கைதி, கமல் நடித்த விக்ரம் படங்களின் காட்சிகள் இப்படத்தில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கைதி, விக்ரம் படங்களில் நடித்த நரேன் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், ‛லியோ படத்தில் லோகேஷ் கனகராஜின் முந்தைய படங்களின் காட்சிகள் இடம்பெறுவதற்கு வாய்ப்பு இல்லை. இப்படத்திற்கு என்று ஒரு தனி யுனிவர்ஸ் ஒன்றை அவர் உருவாக்கி இருக்கிறார்' என தெரிவித்துள்ளார்.




