கமல் தொகுத்து வழங்க பிக்பாஸ் 7 துவங்கியது: 100 நாட்கள் தாக்குபிடிக்க போகும் போட்டியாளர் யார்? | விஜய்க்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி? | தணிக்கை சான்றிதழுக்கு அனுப்பப்பட்ட விஜய்யின் லியோ படம்! | இறைவன் படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! | பகவந்த் கேசரி படத்தின் இரண்டாம் பாடல் அறிவிப்பு! | சூரி நடிக்கும் கருடன் பட அப்டேட்! | நாகார்ஜூனா படத்தில் இணைந்த இரண்டு இளம் நாயகிகள்! | பொங்கலுக்கு வெளியாகிறது ‛லால் சலாம்' | நியூயார்க்கில் சைக்கிள் ரைடு சென்ற திரிஷா! | விஜய் 68வது பட பாடலுக்கு நடனம் அமைக்கும் ராஜூசுந்தரம்! |
தற்போது தெலுங்கில் பிரபாஸ் நடிக்கும் சலார் படத்தில் ஒரு மாறுபட்ட வேடத்தில் நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். இந்த படத்தை கேஜிஎப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. அதோடு ‛தி ஐ' என்ற ஹாலிவுட் படத்திலும் நடிக்கிறார் ஸ்ருதிஹாசன். இந்த நிலையில் தற்போது அவர் நானி நடிக்கும் 30வது படத்திலும் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகி இருக்கிறார் ஸ்ருதிஹாசன்.
நானிக்கு ஜோடியாக சீதா ராமம் புகழ் மிர்னாள் தாக்கூர் நடிக்கும் இப்படத்தை சவுரியவ் என்பவர் இயக்குகிறார். தற்போது இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கோவாவில் நடைபெற்று வருகிறது. அதில் நானி, ஸ்ருதிஹாசன், மிர்னால் தாக்கூர் ஆகியோர் நடித்து வருகிறார்கள். மேலும், இந்த படம் மூலம் முதன்முறையாக நானியுடன் இணைந்திருக்கிறார் ஸ்ருதிஹாசன்.