லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
மணிரத்னம் இயக்கி உள்ள 'பொன்னியின் செல்வன்' வரலாற்று படத்தின் 2ம் பாகம் வருகிற 28ம் தேதி வெளிவருகிறது. இந்த படத்தின் புரமோசனுக்காக படக்குழுவினர் நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக ஐதராபாத்தில் நடந்த விழாவில் பேசிய மணிரத்னம் 'பாகுபலி கொடுத்த தைரியத்தால் பொன்னியின் செல்வன் உருவானது' என்றார்.
மேலும் அவர் கூறியதாவது: பொன்னியின் செல்வன் நாவலை படமாக்கும் ஆர்வம் பல ஆண்டுகளாக எனக்குள் இருந்தது. ஆனால் அதற்கான முயற்சியும், திட்டமிடலும் என்னிடம் இல்லை. காரணம் படத்திற்கு ஆகும் பட்ஜெட். அதனால் இந்த படத்தை நான் உருவாக்குவேன் என்பது கூட எனக்குத் தெரியாது.
இந்த நிலையில் சரித்திர பின்னணியில் 'பாகுபலி' படத்தை ராஜமவுலி எடுத்தார். அந்தபடம் ஏற்படுத்திய தாக்கம் எனக்கு ஆச்சர்யத்தை கொடுத்தது. பொன்னியின் செல்வனை உருவாக்கும் உந்து சக்தியை கொடுத்தது. நான் ராஜமவுலிக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். பாகுபலியை இரண்டு பாகங்களாக அவர் உருவாக்காவிட்டால் நானும் பொன்னியின் செல்வனை இரண்டு பாகங்களாக உருவாக்கி இருக்க மாட்டேன். இது எனக்கு புது பாதையை உருவாக்கி தந்தது. நிறைய வரலாற்று கதைகளை எடுக்க முடியும் என்ற நம்பிக்கையை சினிமாத் துறையில் பலருக்கும் கொடுத்தது. இதை அவரை சந்தித்தும் நான் சொல்லி இருக்கிறேன். என்றார்.