2025 பொங்கல் போட்டியில் அப்பா, மகன்? | தனது முந்தைய வசூலை முறியடிப்பாரா 'வேட்டையன் ' ரஜினிகாந்த் | 'வேட்டையன்' படமே கடைசி : வீடுகளாக மாறப் போகும் உதயம் தியேட்டர் | 'தேவரா' வசூல், வரவேற்பு : வருத்தத்தில் என்டிஆர் | குறைந்து போன ஓடிடி, சாட்டிலைட் உரிமை விற்பனை | மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் மிஷ்கின் | இயக்குனர் ஆனார் பிரபல படத்தொகுப்பாளர் | பிளாஷ்பேக் : ‛டேய் இது இங்கிலீஷ் குரூப்புடா...' - பொன்மனச் செல்வன் படப்பிடிப்பில் விஜயகாந்த் கலாட்டா | தன் பெயரில் பண மோசடி விளம்பரம் : பாடகி சித்ரா எச்சரிக்கை | தாதாவுடன் பார்ட்டியில் கலந்து கொண்டேனா? - பிரயாகா மார்டின் விளக்கம் |
முன்னணி இயக்குனர் லிங்குசாமி தனது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் சார்பில் 'எண்ணி ஏழு நாள்' என்ற படத்தை தயாரிக்க பி.வி.கே கேபிடல் என்ற நிறுவனத்திடமிருந்து ஒரு கோடியே 3 லட்சம் கடன் பெற்றிருந்தார். இந்த கடனை திருப்பிச் செலுத்த அவர் கொடுத்த காசோலை வங்கியில் இருந்து திரும்பி வந்ததால் லிங்குசாமி மீது பி.வி.கே நிறுவனம் செக் மோசடி வழக்கு தொடர்ந்தது.
சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடந்த வந்த இந்த வழக்கல் லிங்குசாமிக்கும், அவரது தம்பி சுபாஷ் சந்திரபோசுக்கும் 6 மாதம் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பை ரத்து செய்யக்கோரி திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் காசோலை தொகையில் 20 சதவிகித்தை கோர்ட்டில் கட்ட தயாராக இருப்பதாகவும் லிங்குசாமி தரப்பில் கூறப்பட்டது. இதை ஏற்ற நீதிமன்றம் லிங்குசாமி மற்றும் அவரது தம்பிக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.