அரசன் படத்திற்காக 2 மாதங்களாக இரவில் நடக்கும் படப்பிடிப்பு | 'லிங்கம்' வெப் சீரீஸ் 26ம் தேதி வெளியாகிறது | இங்கிலாந்து மன்னரின் 'சர்' பட்டம் பெற்ற ஹாலிவுட் நடிகர் | பிளாஷ்பேக்: உடலால் வாழ்ந்து, உடலால் வீழ்ந்த உசிலைமணி | பிளாஷ்பேக்: முதல் பாகம் மலையாளத்தில், 2ம் பாகம் தமிழில் | விஜய் சேதுபதி நடித்த ஸ்லம்டாக் தமிழ் படமா? டப்பிங்கா? | காக்டெயில் 2 படத்தில் நடிக்க பயந்தேன் : ராஷ்மிகா மந்தனா | 10 வருடத்திற்கு பிறகு ‛பரிமளா அண்ட் கோ'வில் மீண்டும் கதகளி ஆடிய பாண்டிராஜ் | ஸ்வாசிகாவுக்கு விருது கிடைக்கும் : நுாறுசாமி குறித்து இயக்குனர் சசி | கில்லர் பட விபத்து : எஸ்.ஜே.சூர்யா நிதி உதவி |

தமிழ்த் திரையுலகில் எழுத்தாளராக, தயாரிப்பாளராக வலம் வந்தவர் தூயவன். அவரது மகன் பாபு தூயவன் தமிழ்நாடு திரைப்படக் கல்லூரியில் பயின்று 'கதம் கதம்' என்ற படத்தை தயாரித்து இயக்கியிருந்தார். 'இட்லி' என்ற படத்தையும் தயாரித்திருக்கிறார். தற்போது அவரது மனைவி முஸ்திரி தயாரிக்கும் படம் 'ஜெனி'.
திரைப்படக் கல்லூரியில் படித்த நித்தியானந்தம் இயக்குகிறார். கீதாகரன் ஒளிப்பதிவு செய்கிறார். யதீஷ் இசை அமைக்கிறார். பாரீஸ் ஜெயராஜ் படத்தின் முக்கிய வேடத்தில் நடித்த விவாந்த் நாயகனாக நடித்துள்ளார். 'மைடியர் பூதம்' திரைப்படத்தில் குழந்தை நாயகனாக மிரட்டிய பரம் விக்னேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களோடு மைதிலி, பிஜாய் மேனன், ஆக்க்ஷன் பிரகாஷ் ஆகியோர் பிரதான வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
படம் பற்றி இயக்குனர் கூறியதாவது: துஷ்ட ஆவி ஒன்று சிறுவனை ஆக்ரமிக்க முயல அதிலிருந்து தன்னையும் தன் குடும்பத்தையும் காக்க அந்த சிறுவனும் அவர் தந்தையும் போராடும் திகிலூட்டும் அமானுஷ்ய சம்பவங்கள் நிறைந்த படம். ரசிகர்களை இருக்கை நுனியில் பதைபதைப்போடு பார்க்க வைக்கும். இது ஒரு திரைப் படக் கல்லூரி மாணவர்களின் மாறுபட்ட படைப்பு. என்றார்.