நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
தமிழ் சினிமாவில் அம்மா, அப்பா, தாய்மாமன், தாத்தா, பாட்டி பெருமைகளை நிறைய பேசிவிட்டார்கள். சித்தப்பா என்பது சிறிய கேரக்டர் ஆர்ட்டிஸ்டாகவே கடந்து போகும். அல்லது ஹீரோ அண்ணன் குழந்தைகளுக்கு சித்தப்பா என்று தொட்டுவிட்டுச் செல்லும். தற்போது சித்தப்பா என்கிற உறவின் பெருமையை சொல்லும் படமாக உருவாகிறது 'சித்தா'. காதலில் சொதப்புவது எப்படி, ஜில் ஜங் ஜக், அவள் படங்களை தயாரித்த ஏக்தா எண்டர்டெயின்மென்ட் இதனை தயாரிக்கிறது. பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படத்தை இயக்கிய எஸ்.யு.அருண்குமார் இயக்குகிறார். சித்தார்த் கதையின் நாயகனாக நடிக்கிறார். மற்ற நடிகர், நடிகைகள் குறித்து விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.