சூர்யா பட இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா | எந்த நிலையிலும் உமக்கு மரணமில்லை : கண்ணதாசனை புகழ்ந்த கமல் | நான் ஒரு கிளீன் ஸ்லேட் : மமிதா பைஜு | ‛அரசன்' புரொமோ பயராக உள்ளது : அனிருத்திற்கு சிம்பு பாராட்டு | ‛ரெட்ட தல' படத்தின் கதைக்கரு இதுதான் : இயக்குனர் தகவல் | ஹீரோ அவதாரம் எடுக்கும் தேவி ஸ்ரீ பிரசாந்த் | கேரளா திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்திற்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் | ஒரு டஜன் வாழைப்பழம் மட்டும் சம்பளமாக பெற்றுக்கொண்டு நடித்த கோவிந்தா | பெண் குற்றச்சாட்டை தொடர்ந்து உதவி இயக்குனர் மீது காவல்துறையில் புகார் அளித்த துல்கர் சல்மான் நிறுவனம் | பாகுபலி : தி எபிக் ரன்னிங் டைம் சென்சார் சான்றிதழ் வெளியானது |
மாங்காடு அம்மன் மூவிஸ் சார்பில் ராஜகணபதி தயாரித்து, கதையின் நாயகனாக நடித்துள்ள படத்தின் தலைப்பு 'ஏ படம்'. இது ஆபாச படம் அல்ல... இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கி அம்பேத்கரை பற்றிய படம். அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றோடு ஜாதி மத பிரச்சினைகளையும் கல்வி, மருத்துவம் மற்றும் விவசாயத்தின் முக்கியத்துவத்தையும் கமர்ஷியலாக சொல்லும் படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தை கேஸ்ட்லெஸ் சிவா என்பவர் இயக்கியுள்ளார். மேகா ஸ்ரீ , சுஷ்மிதா சென் கதாநாயகிகளாக நடிக்க, சந்திரபோஸ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தின் அறிமுக நிகழ்ச்சியில் தயாரிப்பாளரும் நடிகருமான ராஜகணபதி கூறியதாவது: இந்த படத்தில் நான் அம்பேத்கராக நடித்திருக்கிறேன். இந்த படத்திற்காக சென்சாருடன் போராட்டம் நடத்த வேண்டி இருக்கிறது. படத்திற்கு நிறைய எதிர்ப்புகளும் இருக்கிறது. இந்த படத்திற்கு சென்சார் சான்றிதழ் மறுக்கப்பட்டால் ஓடிடியில் வெளியிடவும் திட்டம் வைத்திருக்கிறோம். என்று கூறினார்.
இயக்குனர் கேஸ்ட்லெஸ் சிவா கூறியதாவது: இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் இதற்கு என்ன சான்றிதழ் கொடுப்பது என தீர்மானிக்க முடியாமல் திணறினார்கள். ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்புகிறோம் என கூறி நடிகை கவுதமி உள்ளிட்ட 15 பேர் கொண்ட குழுவினர் இந்த படத்தை பார்த்தார்கள். 44 இடங்களில் இந்த படத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என கூறியுள்ளார்கள். ஆனாலும் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் இறங்கவுள்ளோம். என்றார்.