அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெற்றி பெற வாழ்த்திய ரஜினி | ரசிகர்களுடன் குட் பேட் அக்லி படம் பார்த்து ரசித்த ஷாலினி அஜித் | ஹவுஸ் மேட்ஸ் படத்தை வெளியிடும் சிவகார்த்திகேயன் | சின்னத்திரை டூ வெள்ளித்திரை... தமிழ் பேசும் நடிகைகளுக்கும் வாய்ப்பு : மாறுது சினிமா டிரெண்ட்! | சூர்யா 45 படத்தில் இணைந்த இளம் நடிகை | தனுஷ் 56வது படத்தை இயக்கும் மாரி செல்வராஜ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | வெளிநாடு சென்றாலும் கையோடு குக்கர் எடுத்துச் செல்லும் ராம்சரண்: மனைவி தகவல் | காதலியின் மகள் பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடிய நடிகர் தர்ஷன் | அரபு நாடுகளில் மரண மாஸ் திரைப்படம் வெளியாக தடை | 7 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்த பிரித்விராஜ் - பார்வதி |
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 42வது படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திஷா பதானி நாயகியாக நடிக்கும் இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். 3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் இந்த படம் 10 மொழிகளில் வெளியாக உள்ளது. இப்படத்திற்கு ‛கங்குவா' என டைட்டில் வைத்துள்ளனர்.
இந்த நிலையில் ‛கங்குவா' படத்தின் ஆடியோ உரிமையை சரிகம நிறுவனம் வாங்கி உள்ளது. அதுகுறித்த ஒரு தகவலை சரிகம நிறுவனம் ஒரு வீடியோ மூலம் தெரிவித்திருக்கிறது. அதோடு இந்த படத்தின் ஆடியோ உரிமை 10 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில் சூர்யா இதுவரை நடித்த படங்களில் இந்த படத்தின் ஆடியோ உரிமைதான் அதிக விலைக்கு விற்பனையாகி உள்ளது என்றும் கூறப்படுகிறது.