குட் பேட் அக்லி : ஓஜி சம்பவம் பாடல் வெளியானது | ஜனநாயகன் படம் குறித்து மமிதா பைஜூ கொடுத்த அப்டேட் | இயக்குனர் ஷங்கரின் மகன் அர்ஜித்தை ஹீரோவாக்கும் பிரபுதேவா | ஏஸ் படத்தின் உருகுது உருகுது... முதல் பாடல் வெளியானது | சிம்பொனி இசை: பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற இளையராஜா | 'வாகா' நடிகை ரன்யா ராவ் வழக்கில் திடீர் திருப்பம் | 'லாக்டவுன்' படம் 'லாக்' ஆகி விட்டதா ? | திட்டமிட்டபடி படப்பிடிப்பை முடிக்கும் லோகேஷ் கனகராஜ் | மீண்டும் ஹீரோவான 'பன்னீர் புஷ்பங்கள் ' சுரேஷ் | நயன்தாரா படத்தை ஓடிடியில் வெளியிடுவது ஏன்? : இயக்குனர் விளக்கம் |
மலையாள திரை உலகில் வில்லன், குணச்சித்திர மற்றும் கதையின் நாயகன் என மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் ஷைன் டாம் சாக்கோ. தமிழில் விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் வில்லன்களில் ஒருவராக கொஞ்ச நேரமே வந்து போகும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதேசமயம் தன்னை அந்தப்படத்தில் மோசமாக காட்டியதற்காக இயக்குனர் நெல்சன் மீது விமர்சனங்களையும் வைத்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த நிலையில் சமீபத்தில் தெலுங்கில் நானி நடிப்பில் வெளியான தசரா படத்தில் முக்கிய வில்லனாக நடித்திருந்தார் ஷைன் டாம் சாக்கோ. இதில் இவரது வில்லத்தனம் கலந்து நடிப்பிற்கு ரசிகர்களிடம் பாராட்டுக்கள் கிடைத்து வருகின்றன.
இந்த நிலையில் மலையாளத்தில் அடி என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் ஷைன் டாம் சாக்கோ. இந்தப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளின்போது ஒரு பேட்டியில் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கூறும் போது தானும் தனது மனைவியும் பிரிந்து வாழ்வதாக கூறியுள்ள ஷைன் டாம் சாக்கோ தனது ஏழு வயது மகன் அவனது தாயிடம் தான் வளர்கிறான் என்கிற தகவலையும் கூறினார்.
அது மட்டுமல்ல கணவன், மனைவி இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தால், அதன்பின்னர் குழந்தைகள் யாரோ ஒருவரிடம் மட்டும் தான் வளர வேண்டும். அவர்கள் அந்த ஒருவரது பக்கத்துக் கதையை மட்டுமே கேட்டு வளர்ந்தாலும் தப்பில்லை. அங்கே பத்து நாள், இங்கே பத்து நாள் என மாறி மாறி குழந்தைகள் வளரும்போது தேவையில்லாமல் அவர்கள் குழப்பத்திற்கு ஆளாவார்கள். அம்மா அப்பா இருவரின் வார்த்தை தாக்குதல்களுக்கும் ஆளாவார்கள். அதற்கு பதிலாக யாரோ ஒருவரிடம் தொடர்ந்து வளர்வதுதான் குழந்தைகளுக்கு நல்லது” என்று கூறியுள்ளார் ஷைன் டாம் சாக்கோ.