விஜய் பாணியை பின்பற்றினால் நல்லது: 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜூ | விரைவில் 'லக்கி பாஸ்கர் 2': வெங்கி அட்லூரி அப்டேட் | கூலி திரைப்படம் ஐமேக்ஸில் வெளியாவதில் புதிய சிக்கல்? | காமெடி நடிகரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு 50 லட்சம் தர பிரபாஸ் வாக்குறுதி | படம் என்ன ஜானர் என்று ரிலீஸுக்கு முன்பே சொல்லிவிடுங்கள் ; சசிகுமார் வேண்டுகோள் | 'தொடரும்' கெட்டப்பில் புரோமோ வீடியோவுடன் பிக்பாஸ் சீசன் 7 அறிவிப்பை வெளியிட்ட மோகன்லால் | இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் மொத்தமாக நீக்கிய ரன்வீர் சிங் ; ரசிகர்கள் கவலை | சூர்யா பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் தெலுங்கு 'அயன்' | அசோக் செல்வன் புதிய பட அப்டேட்! | 'பையா' பட தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகிறது! |
மலையாள நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம் குழந்தை நட்சத்திரமாக மலையாளத்தில் பல படங்களில் நடித்திருந்தாலும் முதன்முறையாக தமிழில் ஒரு பக்க கதை என்கிற படத்தில் தான் கதாநாயகனாக அறிமுகமானார். அந்த படம் வெளியாக தாமதமான சூழ்நிலையில் அதைத்தொடர்ந்து சில படங்களில் நடித்தாலும் அவர் பெயர் சொல்லும் அளவிற்கு அமையவில்லை.
அதே சமயம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படத்தில் கமலின் மகனாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தது அவரை வெகுவாக ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. இந்தநிலையில் தற்போது இந்தியன் 2 படத்தில் மீண்டும் கமலுடன் இணைந்து நடித்துள்ளார் காளிதாஸ் ஜெயராம்.
இந்த அனுபவம் குறித்து அவர் கூறும்போது, “கமல் சாருடன் இந்த படத்தில் மீண்டும் இணைந்து நடித்தது மகிழ்ச்சியான ஒன்று. அவருடன் நடிக்கும்போது நம்முடையை வீட்டிற்கு திரும்பி செல்வது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது.. அதுமட்டுமல்ல ஷங்கர் சாரின் படங்களை பார்த்து சிறுவயதிலிருந்தே வளர்ந்தவன் நான். இந்த இருவருடனும் ஒரே செட்டில் இணைந்து பணியாற்றிய அனுபவம் ஒவ்வொரு நாளும் ஒரு ரசிகனாகவே நான் மாறிய தருணமாக இருந்தது” என்று கூறியுள்ளார்..
நடிகர் கமல் கடந்த 35 வருடங்களுக்கு முன்பே மலையாளத்தில் ஜெயராமுடன் சாணக்யன் என்கிற படத்தில் இணைந்து நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து தமிழில் ஜெயராமுக்கு தன்னுடைய தெனாலி, பஞ்சதந்திரம், உத்தம வில்லன் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்கள் கொடுத்து நடிக்க வைத்தார். ஜெயராமை போலவே தற்போது அவரது மகன் காளிதாஸையும் கமல் அரவணைத்து செல்வது ஆச்சரியமான ஒன்றுதான்.