மலையாள திரையுலகை பிடித்து ஆட்டும் கேமியோ ஜுரம் | முதலில் ‛பியார் பிரேமா காதல்' இப்போது ‛பியார் பிரேமா கல்யாணம்' | ஜெயிலர் 2 படத்தில் சர்ப்ரைஸ் ஆக என்ட்ரி தரும் வித்யாபாலன் | மீசைய முறுக்கு 2ம் பாகம் படப்பிடிப்பு துவங்கியது | வராது... ஆனா வரும்! பாஸ்கியுடன் ஒரு 'கலகல' | இரண்டே முக்கால் மணி நேரம் ஓடும் 'மதராஸி' | தீபாவளி போட்டியில் இதுவரையில் 5 படங்கள் | மலையாள தேசத்தில் தமிழ் பாடும் குஜராத்தி... நடிகை சரண்யா ஆனந்த் | மெல்ல மெல்ல முன்னேறுவேன் : சஷ்டிகாவின் கனவு | எனக்குத் தெரிந்த அரசியல் இது தான்..! : பாலா பேட்டி |
தெலுங்குத் திரையுலகத்தின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் குணசேகர். அவருடைய பெயர் சொல்வதற்கு ஒரே ஒரு படம் போதும். அது மகேஷ் பாபு நடித்து 2003ல் வெளிவந்த 'ஒக்கடு'. அப்படம்தான் தமிழில் விஜய் நடிக்க 'கில்லி' என ரீமேக் ஆனது. கடந்த 30 வருடங்களில் 13 படங்கள் மட்டுமே இயக்கியுள்ளார் குணசேகர். சிரஞ்சிவி, மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன், ரவி தேஜா ஆகியோரை இயக்கியுள்ளார்.
2015ல் 'பாகுபலி' படம் வெளிவந்த பிறகு குணசேகர் இயக்கிய 'ருத்ரமாதேவி' என்ற சரித்திரப் படம் வெளிவந்தது. அனுஷ்கா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க அல்லு அர்ஜுன் சிறப்புத் தோற்றத்தில் நடித்தார். 'பாகுபலி' அளவுக்கு 'ருத்ரமாதேவி' படம் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. இருப்பினும் தன்னுடைய அடுத்த படமாக எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு 'சாகுந்தலம்' படத்தை இயக்கியுள்ளார்.
சமந்தா இப்படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த வாரம் ஏப்ரல் 14ம் தேதி இப்படம் பான் இந்தியா படமாக வெளிவர உள்ளது. இப்படத்திற்காக சமந்தா தன் உடல்நலத்தையும் மீறி நிறையவே புரமோஷன் செய்து வருகிறார். 'பாகுபலி' படத்தில் நடித்த அனுஷ்கா, 'ருத்ரமாதேவி' படத்தில் நடித்திருந்தும் ஏமாற்றத்தைத்தான் தந்தார். ஆனால், அந்த ஏமாற்றத்தை இந்த 'சாகுந்தலம்' படம் மூலம் சமந்தா சரி செய்வாரா என்பது சில நாட்களில் தெரிந்துவிடும்.