2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

பாலிவுட்டில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் சல்மான் கான். விரைவில் இவரது நடிப்பில் உருவான கிஸி கி பாய் கிஸி கி ஜான் படம் வெளியாகவுள்ளது. சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியொன்றில் சல்மான்கான் பங்கேற்றார். அப்போது அவர் பேசும்போது, "ஹிந்தி சினிமா துறைக்கு வந்துள்ள இளம் நடிகர்கள் பலரும் திறமையானவர்களாக இருக்கிறார்கள். கடினமாக உழைக்கிறார்கள். அதற்காக சீனியர் நடிகர்களான எங்களை குறைத்து மதிப்பிட வேண்டாம். அவர்களுக்கு தொடர்ந்து நாங்கள் சவாலாகவே இருப்போம். நானும், ஷாருக்கான், அஜய்தேவகன், அமீர்கான், அக்ஷய் குமார் ஆகியோரும் அவ்வளவு சுலபமாக சினிமா துறையை விட்டு விலகவே மாட்டோம்'' என கூறியுள்ளார்.