இயக்குனர் பாரதிராஜா காலமானார் | அனைவரும் மறந்து போன 'இந்தியன் 3' | ஜூன் 19ல் 'ஜில்லா, மெர்சல்' ரீ ரிலீஸ்: விஜய் ரசிகர்களுக்கு 'டபுள்' ட்ரீட் | இந்த மாதம் வெளியாகும் தனுஷ் 55 பட தலைப்பு, முதல் பார்வை | இரண்டு சூப்பர் படங்களை மிஸ் செய்த தேஜூ அஸ்வினி | வெனிஸ் நகரில் திருமண நாளைக் கொண்டாடிய நயன்தாரா, விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதி டீசர் Vs விஜய் ஆண்டனி டிரைலர், முந்துவது எந்த விஜய்? | வெளியீட்டிற்குப் பின் 'பெத்தி'யைத் தவிர்க்கும் ஜான்வி கபூர் | ஐந்து ரூபாய் டாக்டராக நடிக்கிறாரா ரஜினிகாந்த்...? | 25வது நாளில் 'கருப்பு' : சூர்யாவின் பல வருடக் கனவு |

கடந்த 2021 நவம்பர் மாதம் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன், எஸ்ஜே சூர்யா நடிப்பில் வெளியான படம் மாநாடு. முதல்முறையாக இந்தியாவில் அதுவும் தமிழில் டைம் லூப் என்கிற கான்செப்டை மையப்படுத்தி உருவானது இந்த படம். ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாக இருந்ததுடன் ரசிகர்களுக்கு 100% பொழுதுபோக்கு படமாகவும் அமைந்தது. குறிப்பாக இந்த படத்தில் ஹீரோவாக நடித்த சிலம்பரசனுக்கும் வில்லனாக நடித்த எஸ்ஜே சூர்யாவிற்கும் சம அளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அதேசமயம் ஹீரோவை விட வில்லன் எஸ்ஜே சூர்யா இன்னும் ஒரு படி அதிகமாகவே ஸ்கோர் செய்தார் என்று கூட சொல்லலாம்.
இந்தநிலையில் இந்தப்படம் தற்போது தெலுங்கு மற்றும் இந்தியில் ஒரே நேரத்தில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது. இதில் சிலம்பரசன் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் வருண் தவானும் எஸ்ஜே சூர்யா நடித்த கதாபாத்திரத்தில் தெலுங்கு முன்னணி நடிகரான ரவிதேஜாவும் நடிக்க இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. இதன் மூலம் ரவிதேஜா முதன்முறையாக இந்தியிலும் அடியெடுத்து வைக்க இருக்கிறாராம். தமிழில் இயக்கிய வெங்கட்பிரபுவே இந்தப்படத்தின் இந்தி, தெலுங்கு ரீமேக்கை இயக்குவாரா அல்லது வேறு இயக்குனர் இயக்குவாரா என்பது குறித்து இனிமேல் தான் தெரிய வரும் என்கிறார்கள் தெலுங்கு திரை உலக வட்டாரத்தில்.