என்னை லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்க வேண்டாம் : நயன்தாரா வேண்டுகோள் | படுத்தே விட்டானய்யா மொமண்ட் : கமலை கடுமையாக கலாய்த்த நடிகை கஸ்தூரி | இயக்குனராக அடுத்த படத்திற்கு தயாரான தனுஷ் | நாக சைதன்யா படத்தின் துவக்க விழாவில் கலந்து கொண்ட நாகார்ஜூனா, வெங்கடேஷ் | உடல் தோற்றம் பற்றிய கமென்ட்டால் அழுது இருக்கேன் - கீர்த்தி பாண்டியன் | அனுராக் காஷ்யப் இயக்கத்தில் நடிக்கும் ஜி.வி.பிரகாஷ் | பைட்டர் டீசரில் பிகினி, லிப்லாக்கில் தீபிகா படுகோனே | பைட் கிளப் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது | முத்து ரீ-ரிலீஸ் முதல் காட்சியை பார்த்து ரசித்த மீனா | டொவினோ தாமஸ் பட இயக்குனரிடம் மன்னிப்பு கேட்ட மம்முட்டி பட இயக்குனர் |
தமிழில் சிம்பு ஹீரோவாக அறிமுகமான காலகட்டத்தில் அவர் நடித்த குத்து படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் திவ்யா ஸ்பந்தனா என்கிற ரம்யா. அந்த படத்திற்கு பிறகு குத்து ரம்யா என்றே ரசிகர்களால் அழைக்கப்பட்டார். தொடர்ந்து அர்ஜுனுடன் கிரி, தனுசுடன் பொல்லாதவன், சூர்யாவுடன் வாரணம் ஆயிரம் ஆகிய படங்களில் நடித்தவர், தமிழில் கடைசியாக சிங்கம் புலி படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். கர்நாடக மாநிலத்தில் இருந்து பார்லிமென்ட் தேர்தலில் போட்டியிட்டு 5 வருடங்கள் எம்.பி.யாக பொறுப்பு வகித்தார். அதன்பிறகு பெரிய அளவில் படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தவர், தற்போது மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். ஆனால் நடிகையாக அல்லாமல் ஒரு தயாரிப்பாளராக.
ஆம். தற்போது அவர் தயாரித்துள்ள படத்திற்கு சுவாதி முத்தின மலஹனியே என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இது நடிகர் ரவிச்சந்திரன் படத்தின் ஹிட் பாடலின் முதல் வரி ஆகும். இந்த படத்தை ராஜ் பி.ஷெட்டி கதாநாயகனாக நடித்து இயக்குகிறார் ஆர்ஜே ஸ்ரீ ரவிகுமார் என்பவர் கதாநாயகியாக நடித்துள்ளார்..இந்த படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர்களில் தானும் ஒருவராக இணைந்துள்ளார் ரம்யா..
இந்த படம் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் பிரபல கன்னட இயக்குனர் ராஜேந்திர சிங் பாபு என்பவர் இந்த படத்தின் டைட்டிலை ரம்யா பயன்படுத்தக் கூடாது என நீதிமன்றத்தில் தடை கேட்டு வழக்கு தொடர்ந்தார். அதில் அவர், தான் கடந்த 30 வருடங்களுக்கு முன்பு இயக்கிய பன்னட கெஜ்ஜே என்கிற படத்தில் இந்த பாடல் வரி இடம் பெற்றிருந்ததாகவும் அதற்கு பின்னர் சில வருடங்கள் கழித்து இந்த பாடல் வரி கொண்ட டைட்டிலை வைத்து அம்பரீஷ் சுகாசினி நடித்த படம் ஒன்றை இயக்கியதாகவும் கூறியுள்ள அவர் இந்த டைட்டிலை ரம்யா பயன்படுத்தக் கூடாது என கூறியிருந்தார்.
இந்த நிலையில் தற்போது இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ரம்யா இந்த படத்தின் டைட்டிலை பயன்படுத்துவதில் எந்த தடையும் இல்லை என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால் உற்சாகத்தில் இருக்கிறார் ரம்யா.