2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆகி அதன்பிறகு இயக்குனரானவர் வெங்கட் பிரபு. சென்னை- 28, மங்காத்தா, மாநாடு உட்பட பல படங்களை இயக்கியவர் தற்போது கஸ்டடி என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் நாகசைதன்யா நாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக கிர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். போலீஸ் கதையில் உருவாகியிருக்கும் இந்த படம் மே மாதம் திரைக்கு வருகிறது. தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் உருவாகி உள்ளது. இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசையமைக்கின்றனர். இப்படத்தில் இயக்குனர் வெங்கட் பிரபுவின் மகளான ஸ்ரீ ஷிவானி பாடலாசிரியராக அறிமுகமாகிறார். காவல்துறையை மையமாகக் கொண்டு அவர் எழுதி இருக்கும் பாடல் வருகிற பத்தாம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு தனது ஐந்தாவது வயதிலேயே தாய் என்ற ஆல்பத்திலும் ஒரு பாடல் பின்னணி பாடியிருக்கிறார் ஸ்ரீ ஷிவானி என்பது குறிப்பிடத்தக்கது.