2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

சென்னையில் உள்ள கலாச்ஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நான்கு பேராசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இந்த நிலையில் முன்னாள் மாணவியான நடிகை அபிராமி வெங்கடாச்சலம், சோசியல் மீடியாவில் ஒரு கருத்து வெளியிட்டிருந்தார். அதில், எப்போதுமே ஒரு விஷயத்தை ஒரு பக்கமாக இருந்து மட்டுமே பார்க்கக் கூடாது. பேராசிரியர்கள் பக்கமும் இருந்து பார்க்க வேண்டும். 80 வருட பாரம்பரியம் உள்ள கலாஷேத்ராவின் முன்னாள் மாணவி என்ற முறையில் அங்கு எந்த விதமான தவறு நடந்திருக்கவும் வாய்ப்பில்லை என்று ஒரு கருத்து வெளியிட்டிருந்தார்.
இதுதொடர்பாக அவரை பலரும் வசை பாடினார். சிலர் மிரட்டவும் செய்தனர். இதையடுத்து இதுதொடர்பாக போலீஸில் புகாரும் அளித்துள்ளார் அபிராமி.
இந்த நிலையில் அபிராமிக்கு, நடிகை சனம் ஷெட்டி ஒரு எதிர் கருத்து வெளியிட்டு இருக்கிறார். அவர் கூறுகையில், ஆணவம் அறியாமையான பேச்சு பேச விரும்பவில்லை. உங்களுக்கு எதுவும் நடக்கவில்லை என்றால் அவர்களுக்கும் நடக்கவில்லை என்று அர்த்தமில்லை. 80 வருடங்களாக நீங்கள் அந்த கல்லூரியில் இருந்தீர்களா? அங்குள்ள ஒவ்வொரு ஆசிரியரின் ஒவ்வொரு செயலுக்கும் உங்களால் உத்தரவாதம் அளிக்க முடியுமா? நீங்கள் ஏன் பேராசிரியர்கள் பக்கம் மட்டும் இருக்கிறீர்கள்? விரைவில் உண்மை வெளிவரும். அதுவரை காத்திருங்கள் என்று கூறியிருக்கிறார் சனம் செட்டி.
அபிராமி - சனம் ஷெட்டி ஆகிய இருவரும் பிக்பாஸ் போட்டியாளர்களாகவும் இருந்தவர்கள்.