சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

மலையாளத்தில் பிரித்விராஜ் நடிப்பில் உருவாகி வரும் படம் ஆடுஜீவிதம். இயக்குனர் பிளஸ்சி என்பவர் இயக்கியுள்ள இந்த படம் எழுத்தாளர் பென்யமின் என்பவர் எழுதிய ஆடுஜீவிதம் நாவலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்து வரும் இந்த படத்தில் கதாநாயகியாக அமலாபால் நடித்துள்ளார். கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக கேரளா மற்றும் அரபு நாடுகளில் பல இடங்களில் படமாக்கப்பட்டு கடந்த வருடம் ஒரு வழியாக இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது. இந்த படத்தை இந்த வருடம் அக்டோபர் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்கள்.
இந்த நிலையில் திடீரென எதிர்பாராத விதமாக இந்த படத்தின் டிரைலர் வீடியோ ஆன்லைனில் லீக் ஆனது இதனைத்தொடர்ந்து வேறு வழியின்றி எந்தவித போஸ்டர் முன்னறிவிப்பும் இதுவரை செய்யப்படாத நிலையில் தற்போது யூடியூபில் பட குழுவினரே இந்த டிரைலரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர் இதுகுறித்து நடிகர் பிரித்விராஜ் கூறும்போது ஆன்லைனில் இதன் டிரைலர் லீக்கானது தற்செயலாக நடந்து விட்டது. இப்போது உங்கள் அனைவரின் பார்வைக்கும் ஆடுஜீவிதம் டிரைலர் திருவிழா கொண்டாட்டமாக வெளியாகி உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.




