புஷ்பா 2 டப்பிங் ஜரூர் : ஆனால் ராஷ்மிகா முகத்தில் சோகம் | குபேரா படத்தின் முன்னோட்ட வீடியோவை வெளியிடும் மகேஷ் பாபு | யஷ் நடிக்கும் 'டாக்சிக்' படக்குழு மீது வழக்குப்பதிவு | ‛அமரன்' ஓடிடி வெளியீட்டை தள்ளி வைக்க திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை | கங்குவா டிரைலர் - அஜித் கொடுத்த ரியாக்ஷன் | 'கங்குவா' வெளியீடு - வழக்கு சிக்கல்களுக்குத் தீர்வு | 'பிளடி பெக்கர்' நஷ்டத்தைத் திருப்பித் தரும் தயாரிப்பாளர் நெல்சன்? | மே 1 - தொழிலாளர் தினத்தில் ரஜினிகாந்தின் 'கூலி' ரிலீஸ்? | தள்ளிப்போகும் ‛வீர தீர சூரன்' பட ரிலீஸ் | பொங்கல் ரேசில் இணையும் பாலாவின் வணங்கான் |
மலையாளத்தில் தேசிய விருது பெற்ற இயக்குனர் பிளஸ்ஸி இயக்கத்தில் பிருத்விராஜ், அமலாபால் இணைந்து நடித்துள்ள படம் ஆடு ஜீவிதம். இந்த படத்திற்கு ஏ .ஆர். ரகுமான் இசையமைத்திருக்கிறார். மிகவும் மாறுபட்ட கெட்டப்பில் பிருத்விராஜ் நடித்துள்ள இந்த படம் சர்வதேச விழாக்களிலும் திரையிடப்பட இருப்பதோடு, இந்த படத்தில் பிருத்விராஜின் நடிப்புக்கு தேசிய விருது கிடைக்கும் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன. தற்போது இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது. அதில் ஒரு காட்சியில் பிருத்விராஜூம், அமலா பாலும் லிப்லாக் காட்சியில் நடித்துள்ளார்கள். இந்த காட்சி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஐந்து வருடங்களுக்கு மேலாக கேரளா மற்றும் அரபு நாடுகளில் பல இடங்களில் படமாக்கப்பட்டு கடந்த வருடம் ஒரு வழியாக இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது. இந்த படத்தை இந்த வருடம் அக்டோபர் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்கள்.