கேன்ஸ் திரைப்பட விழாவில் 'மாண்புமிகு பறை' | கேரளாவில் தாய்மாமன் கலாசார உறவு இல்லை: ஸ்வாசிகாவின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு | என்னை பற்றி தவறாக பேசுகிறவர்களை கடவுள் பார்த்துக் கொள்வார் : யோகிபாபு | பாகிஸ்தான் சார்ந்த ஓடிடி 'கன்டென்ட்' - தடை விதித்த மத்திய அரசு | சிம்ரனை தொடர்ந்து இலங்கை தமிழ் பேசும் தேவயானி | தக் லைப் அப்பா, மகன் மோதல் கதையா? | ஹீரோ ஆனார் கேபிஒய் பாலா | தியேட்டர், ஓடிடி… அடுத்து டிவியிலும் வரவேற்பைப் பெறாத 'கேம் சேஞ்ஜர்' | பிளாஷ்பேக்: சவாலுக்கு படம் எடுத்த பாலுமகேந்திரா | பிளாஷ்பேக்: குழந்தை நட்சத்திரமாக நடித்த பத்மா சுப்பிரமணியம் |
நடிகர் பிரகாஷ்ராஜை பொறுத்தவரை கடந்த சில வருடங்களாகவே பாரதிய ஜனதா கட்சி மீதும் பிரதமர் நரேந்திர மோடி மீதும் கடுமையான விமர்சனங்களை தொடர்ந்து முன்வைத்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான கிச்சா சுதீப் வரும் கர்நாடக சட்டசபை தேர்தலில் தற்போதைய முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு ஆதரவாக தான் பிரச்சாரம் செய்ய இருப்பதாக கூறியது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
அதேசமயம் கிச்சா சுதீப் தன்னுடைய இந்த முடிவு பற்றி கூறும்போது, பிரதமர் மோடி எடுத்த சில அதிரடி நடவடிக்கைகள் குறித்து எனக்கு அவர் மீது மிகப்பெரிய மரியாதை உண்டு. ஆனால் அதற்காக நான் இங்கே வரவில்லை. நான் இந்த தேர்தலில் பிரச்சாரம் செய்வது பாஜக என்கிற கட்சிக்காக அல்ல.. முதல்வர் பசவராஜ் பொம்மைக்காக மட்டுமே என்று தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி இருந்தார். ஆனால் கிச்சா சுதீப்பின் இந்த அறிவிப்பால் தான் அதிர்ச்சி அடைந்ததாகவும் அதனால் தன்னை மிகவும் புண்படுத்தி விட்டதாகவும் கூறியுள்ளார் நடிகர் பிரகாஷ்ராஜ்.
கிச்சா சுதீப் நடித்திருந்த விக்ராந்த் ரோணா திரைப்படம் வெளியாவதற்கு முன்பே அவர் பிஜேபி கட்சியில் இணைய போகிறார் என்று பேச்சு வந்தபோது, இது திட்டமிட்டு பரப்பப்படும் பொய் செய்தியாகத்தான் இருக்கும் என்றும், சுதீப் போன்ற போன்ற புத்திசாலிகள் இதுபோன்ற முடிவை எடுக்க மாட்டார்கள் என்று அப்போதே சுதீப் மீதான தனது நம்பிக்கையை பிரகாஷ்ராஜ் வெளிப்படுத்தியிருந்தார். இந்த நிலையில் தான் சுதீப் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு தன்னை புண்படுத்தி உள்ளதாக கூறியுள்ளார் பிரகாஷ்ராஜ்.