தி கேர்ள் பிரண்ட் படப்பிடிப்பில் இணைந்த ராஷ்மிகா | பைட்டர் படத்திலிருந்து ஹிர்த்திக் போஸ்டர் வெளியானது | ஸ்டார் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் இதோ | ஹாய் நான்னா படக்குழு புதிய முயற்சி | அமீர்கான், விஷ்ணு விஷாலுக்கு உதவிய அஜித் | அம்மா ஸ்ரீதேவியின் 10 வருட பழைய ஆடையில் மகள் குஷி | நிவின்பாலி - பிரணவை ஒன்றிணைத்த வினீத் சீனிவாசன் | நடிப்பு சொல்லிக் கொடுத்த குருவின் பிறந்தநாளில் பிரபாஸ் அளித்த பரிசு | நடிகை லேனாவுக்கு ஆதரவாக கல்லூரி மாணவிகள் மத்தியில் குரல் கொடுத்த சுரேஷ்கோபி | பெங்களூருக்கு வந்த நானியை வரவேற்று உபசரித்த சிவராஜ்குமார் |
தமிழில் ரன், சண்டக்கோழி உள்ளிட்ட சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் ரசிகர்களின் ஆதரவு பெற்ற நடிகையாக வலம் வந்தார் மலையாள நடிகை மீரா ஜாஸ்மின். அந்த வகையில் பத்து வருடங்களுக்கு முன்பு வரை தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் துடிப்பும் துள்ளலுமான கதாநாயகியாக வலம் வந்த மீரா ஜாஸ்மின், ஒரு கட்டத்தில் காதல் கிசுகிசு, பின்னர் 2014ல் திருமணம், அதன்பிறகு கணவருடன் பிரிவு என சோதனையான காலகட்டத்தை சந்தித்தார். இதனால் திரையுலகில் இருந்து சில வருடங்கள் ஒதுங்கியிருந்த அவர் மீண்டும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் நடிகர் ஜெயராமுக்கு ஜோடியாக மகள் என்கிற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.
இதைத்தொடர்ந்து தற்போது மலையாளத்தில் குயின் எலிசபத் என்கிற படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் மீரா ஜாஸ்மின். இந்த படத்தில் கதாநாயகனாக நரேன் நடிக்கிறார். இவர்கள் இருவரும் இதற்கு முன்னதாக அச்சுவின்டே அம்மா, ஒரே கடல், மின்னாமினி கூட்டம் உள்ளிட்ட சில படங்களில் இணைந்து நடித்தனர். அந்த வகையில் கிட்டத்தட்ட 15 வருடங்கள் கழித்து மீண்டும் இந்த படத்தில் இணைந்து நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது பூஜையுடன் துவங்கியுள்ளது. மலையாளத்தில் மம்முட்டி நடித்த மாமாங்கம், மிகப்பெரிய ஹிட்டான ஜோசப் அதன் தமிழ் ரீமேக்கான விசித்திரன் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் எம் பத்மகுமார் தான் இந்த படத்தை இயக்குகிறார்.