ப்ரூஸ் லீ படத்தின் 'இன்ஸ்பிரேஷன்' தான் 'சிவா' | தமிழ் மார்க்கெட்டை குறி வைக்கும் ஸ்ரீலீலா, பாக்யஸ்ரீ | தோட்டா தரணிக்கு செவாலியே விருது | மீண்டும் ரஜினியை இயக்குவது போன்று கமலையும் இயக்குவீர்களா? சுந்தர்.சி கொடுத்த பதில் | நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் | ‛இன்று போய் நாளை வா' : கே.பாக்யராஜ் சொன்ன பிளாஷ்பேக் | ராஜமவுலி படத்தில் ஸ்ருதிஹாசன் பாடிய பாடல் வெளியீடு | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ராதிகா ஆப்தே படம் | அனந்தா படத்தில் நடந்த அதிசயங்கள் : சத்யசாய்பாபா மகிமை சொன்ன சுரேஷ் கிருஷ்ணா | டப்பிங் பணிகளை துவங்கிய அபிஷன், அனஸ்வரா |

மணிரத்னம் இயக்கத்தில் த்ரிஷா நடித்துள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் ஏற்கனவே வெளியான நிலையில் ஏப்ரல் 28ம் தேதி அப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது. இந்த நிலையில் தற்போது விஜய்யுடன் லியோ படத்தில் நடித்து வரும் திரிஷா, மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடித்து வரும் ராம் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு துனிசியா, பிரிட்டன் போன்ற நாடுகளில் நடைபெற்று வரும் நிலையில் மோகன்லாலுடன் இணைந்து திரிஷாவும் நடித்து வருகிறார். இந்த நிலையில் இந்த ராம் படமும் இரண்டு பாகங்களாக உருவாக இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது.




