ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' | மனைவிக்கு ‛தடா' போட்ட சார்பட்டா நடிகர் | நடிகருக்காக சீன்களை சுடும் இயக்குனர்கள் | லாவண்யாவின் ஸ்(வரம்) | குழந்தை நட்சத்திரத்தில் இருந்து நாயகி வரை: தன்னம்பிக்கையோடு தனலெட்சுமி | ‛காந்தாரா' கண்டெடுத்த அய்ரா |

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் ஏ.ஆர்.முருகதாஸ். இதுவரை பத்துக்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். அதில் 'தீனா, ரமணா, கஜினி, ஏழாம் அறிவு, துப்பாக்கி, கத்தி, சர்க்கார்' ஆகிய வெற்றிப் படங்களும் அடக்கம். அதே சமயம் 'ஸ்பைடர், தர்பார்' என இரண்டு தோல்விப் படங்களையும் கொடுத்துள்ளார். இவற்றில் ரஜினிகாந்த் நடித்த 'தர்பார்' படத்தின் தோல்வி யாரும் எதிர்பாராத ஒன்று.
கடந்த மூன்று வருடங்களாக எந்த ஒரு படத்தையும் இயக்காத ஏஆர் முருகதாஸ் சமீபத்திய பேட்டி ஒன்றில், 'தர்பார்' படத்தின் தோல்விக்கு என்ன காரணம் என்பதை மனம் திறந்து கூறியுள்ளார். “ரஜினிகாந்த் சாரை இயக்கும் வாய்ப்பு எனக்கு பிப்ரவரி மாதம் கிடைக்கிறது. ஜுன் மாதம் மும்பையில் மழைக்காலம். அதற்குள் படத்தை முடிக்க வேண்டும், ஆகஸ்ட் மாதம் அவர் கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்கிறார்கள். நான் ரஜினி சாரின் தீவிர ரசிகன். அந்தப் படத்தை எந்தக் காரணம் கொண்டும் நான் மிஸ் பண்ண விரும்பல.
அன்றைய சூழ்நிலையில் அந்தப் படம்தான் ரஜினி சாரின் கடைசிப் படம் என்று பேசப்பட்டது. அடுத்து அவர் அரசியல் பக்கம் போகப் போகிறார் என்பதே அதற்குக் காரணம். பிப்ரவரியில் வாய்ப்பு கிடைத்து மார்ச் மாதம் ஷுட்டிங் போயி, ஜுனுக்குள் படத்தை முடிக்க வேண்டிய சூழ்நிலை. எப்படியாவது ரஜினி சாரை வச்சி படத்தை ஹிட் கொடுக்கணும்னு நினைச்சேன். ஆனால், சரியான திட்டமிடல் இல்லாம படம் தோல்வியடைஞ்சு போச்சு. ஷுட்டிங் முன்னாடி நமக்கு நிறைய டைம் வேணும். அந்த டைம் லிமிட்டுக்குள்ள படம் பண்ணணும்கறது எனக்கு தோல்வியைத் தந்தது,” என்று சொல்லியிருக்கிறார்.