‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் | தீபாவளி ரேசில் இன்னொரு படம் : ஆனாலும், ரசிகர்கள் பாடு திண்டாட்டம் | சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் | 2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் : பத்ரிநாத் கோயிலில் சாமி தரிசனம் |
சென்னை அணி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் நேற்று நடந்த பிரிமியர் கிரிக்கெட் போட்டியில் லக்னோ அணியை எதிர்த்து விளையாடியது. கடந்த மூன்று வருடங்களாக கொரானோ தாக்கத்தால் சென்னையில் பிரிமியர் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படவில்லை.
தோனி கலந்து கொள்ளும் கடைசி பிரிமியர் கிரிக்கெட் தொடர் இதுவாக இருக்கும் என்ற யூகத்தில் சென்னையில், சென்னை அணி விளையாடும் போட்டிகளைப் பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். வயது வித்தியாசம் இன்றி வெளியூர்களில் இருந்து கூட ரசிகர்கள் நேற்று சென்னை வந்து போட்டியை கண்டு ரசித்தனர்.
சினிமா பிரபலங்களிடமும் சென்னை அணிக்கு அதிக ஆதரவு உண்டு. நேற்று சென்னையில் நடைபெற்ற போட்டியை தனுஷ், சிவகார்த்திகேயன், சதீஷ், ஹரிஷ் கல்யாண், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பிரபலங்கள் நேரில் பார்த்து ரசித்துள்ளனர். அவர்களது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பலரும் பகிர்ந்து வருகிறார்கள்.