குட் பேட் அக்லி டிரைலர் வெளியானது : நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமே...! | ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' |
நடிகை சமந்தா நடிப்பில் இயக்குனர் குணசேகர் இயக்கியுள்ள சாகுந்தலம் திரைப்படம் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் கதாநாயகனாக மலையாள திரையுலகை சேர்ந்த தேவ் மோகன் என்பவர் நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் அதிதி பாலன், பிரகாஷ்ராஜ், மதுபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வருவதை முன்னிட்டு கடந்த சில நாட்களாகவே புரமோஷன் நிகழ்ச்சிகளில் சமந்தா உள்ளிட்ட படக்குழுவினர் தொடர்ந்து கலந்து கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சமீபத்தில் கொச்சியில் நடைபெற்ற இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் படத்தின் நாயகன் தேவ் மோகன் பேசும்போது, “நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது நான் ஈ படம் வெளியானது. அப்போதே சமந்தாவின் நடிப்பையும் அழகையும் பிரமித்து பார்த்தேன். இப்போது அவருடன் இணைந்து ஜோடியாக நடித்துள்ளேன் என்பதை என்னால் நம்ப முடியவில்லை” என்று கூறினார்.
அதற்கு பின் பேசிய சமந்தா, ‛‛இப்படி பொது இடங்களில் வயதை வெளிப்படுத்தும் விதமாக பேசக்கூடாது'' என தேவ் மோகனுக்கு ஜாலியான ஒரு எச்சரிக்கை கலந்த வேண்டுகோளை வைத்தார்.
நடிகை சமந்தாவுக்கு வயது 35 என்பதும், நாயகன் தேவ் மோகனுக்கு 30 வயது தான் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.