அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை |
நடிகர் தனுஷ் தற்போது இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக நடித்து வருகிறார். நாயகியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். முக்கிய வேடங்களில் சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு திருநெல்வேலி பக்கம் நடந்து வருகிறது.
இதேப்போன்று இயக்குனர் ராஜூ முருகன் இயக்கத்தில் உருவாகும் ஜப்பான் படத்தில் நடிகர் கார்த்தியும் பிஸியாக நடித்து வருகிறார். இது கார்த்தியின் 25வது படமாகும். இந்த படமும் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்நிலையில் தனுஷின் கேப்டன் மில்லர் படமும், கார்த்தியின் ஜப்பான் படமும் இந்த வருடத்தின் தீபாவளி அன்று வெளியாகும் என கூறப்படுகிறது.
இதற்கு முன்பே ஆடுகளம் - சிறுத்தை ஒரே நேரத்தில் வெளியானது. அதையடுத்து குட்டி - ஆயிரத்தில் ஒருவன் மோதியது. கடந்த 2016 தீபாவளி அன்று கொடி- காஷ்மோரா படங்கள் வெளியானது. இப்போது கேப்டன் மில்லர் - ஜப்பான் படத்தின் மூலம் நான்காவது முறையாக தனுஷ், கார்த்தி படங்கள் மோதுகிறது.