ஒரு வருட நிறைவில் 'விக்ரம்' : தடம் பதித்த தரமான படம் | இசைக் கலைஞர்கள் சங்க கட்டடம் புதுப்பிப்பு : பிறந்தநாளில் இளையராஜா அறிவிப்பு | போர் வீரனாக நடிக்கும் நிகில் | சொகுசு கார் விவகாரம் : ஹாரிஸ் ஜெயராஜுக்கு விதிக்கப்பட்ட அபராதம் நிறுத்தி வைப்பு | இந்திய சினிமாவின் நாயகன் : மணிரத்னத்தை வாழ்த்திய கமல் | குடும்பத்துடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளையராஜா | கீர்த்தி சுரேஷிற்கு அழகு, அறிவு இரண்டுமே இருக்கிறது : கமல் | சார்பட்டா பரம்பரை 2 எப்போது துவங்கும்? | கார்த்தி படத்தில் இணைந்த அரவிந்த்சாமி | மீனவர் கதாபாத்திரத்தில் நாக சைதன்யா |
தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அல்லு அர்ஜுன். தெலுங்கின் சீனியர் ஹீரோவான சிரஞ்சீவியின் மைத்துனரான அல்லு அரவிந்த்தின் இரண்டாவது மகன்.
அல்லு அர்ஜுன் குழந்தை நட்சத்திரமாக இரண்டு படங்களில் நடித்துள்ளார். அதன் பிறகு 2003ல் வெளிவந்த 'கங்கோத்ரி' என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். தெலுங்கின் பிரபலமான இயக்குனராக கே ராகவேந்திர ராவின் 100வது படம் அது.
தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்துள்ள அல்லு அர்ஜுன் தெலுங்கைத் தவிர மற்ற மொழிகளிலும் அவருக்கென ரசிகர்களை வைத்துள்ளார். தற்போது 'புஷ்பா' படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.
கதாநாயகனாக 20 வருடங்களை நிறைவு செய்துள்ளதை முன்னிட்டு, “இன்று, திரையுலகில் என்னுடைய 20 வருடங்களை நிறைவு செய்கிறேன். ஆசீர்வதிக்கப்பட்டவனாகவும், அன்பால் நனைந்தவனாகவும் இருக்கிறேன். திரையுலகத்தில் உள்ள அனைவருக்கும் எனது நன்றிகள். ரசிகர்கள், பார்வையாளர்கள், அபிமானிகளால் தான் நான் இப்படி இருக்கிறேன். என்றென்றும் நன்றி,” எனக் குறிப்பிட்டுள்ளார்.