அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் சில ஆண்டுகளுக்கு முன் துவங்கிய படம் சங்கமித்ரா. அப்போது இந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்தனர். ஜெயம் ரவி, ஆர்யா இருவரும் கதாநாயகர்களாக நடித்து வந்தனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். பெரிய பட்ஜெட்டில் துவங்கிய இந்த படம் ஒரு சில காரணங்களால் கைவிடப்பட்டது.
இந்நிலையில், இந்தப் படத்தை இப்போது லைகா நிறுவனம் தயாரிக்க முன் வந்துள்ளனர். ஆனால் படப்பிடிப்பு துவங்க தாமதமான காரணத்தால் ஜெயம் ரவி இப்படத்தை விட்டு விலகியுள்ளார். அவருக்கு பதிலாக நடிகர் விஷால் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருந்தார். தற்போது விஷாலுக்கு குறைவான சம்பளம் பேசப்பட்டதால் இத்திரைப்படத்தில் இருந்து விஷால் விலகியதாக கூறப்படுகிறது. இப்போது விஷாலுக்கு பதிலாக மலையாள நடிகர் பிருத்விராஜ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு வருகின்ற ஆகஸ்ட் மாதம் துவங்குகிறது.