ரஜினி, கமல் இணையும் படம்: லதா ரஜினிகாந்த் சொன்ன தகவல் | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் 'கார்மேனி செல்வம்' புதிய ரிலீஸ் தேதி | மீண்டும் சிரஞ்சீவி படத்திற்கு இசையமைக்கும் தமன்! | என் போட்டோவை மார்பிங் செய்கின்றனர்!: ரச்சிதா ஆதங்கம் | ரொமான்டிக் திரில்லர் கதையில் உருவாகும் 'ஆசை' | 'கேம் ஆப் த்ரோன்ஸ்' புதிய தொடர் வெளியானது: உலகம் முழுக்க வரவேற்பு | 'மாஸ்டர் பிளான்' படத்தில் பொலிட்டிக்கல் பிளாக் காமெடி | வில்லனாக நடிக்க விரும்பும் முனீஷ்காந்த் | பிளாஷ்பேக்: 'நிழல்கள்' ராதுவை தெரியுமா? | பிளாஷ்பேக்: ஒரே படத்தில் 3 பேருக்கு வாழ்வளித்த கண்ணதாசன் |

தெலுங்கில் சாகுந்தலம் படத்தை அடுத்து தற்போது விஜய தேவரகொண்டாவுடன் இணைந்து குஷி என்ற படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் சமந்தா. மேலும், யசோதா என்ற படத்தின் டப்பிங் பணியில் இருந்தபோது தனக்கு மயோசிட்டிஸ் என்ற நோய் பாதிப்பு இருப்பதாக அவர் தெரிவித்து இருந்தார். அதன் காரணமாகவே சில மாதங்கள் படங்களில் நடிக்காமல் சிகிச்சை பெற்று வந்தார் சமந்தா. இந்நிலையில் தற்போது தான் ஜிம்மில் தீவிரமாக ஒர்க்அவுட் செய்யும் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார்.
அவர் அளித்துள்ள பேட்டியில், மயோசிட்டிஸ் பிரச்னை குறித்து ஒரு தகவல் தெரிவித்து இருக்கிறார். இன்னமும் மயோசிட்டிஸ் நோயிலிருந்து முழுமையாக தான் விடுபடவில்லை என்று தெரிவித்திருக்கும் சமந்தா, முன்பை விட எனது உடல் நிலையில் தற்போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அதனால் கூடிய சீக்கிரமே இந்த நோயின் பிடியிலிருந்து நான் முழுமையாக விடுபட்டு விடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது என்று அவர் தெரிவித்து இருக்கிறார்.




