“பொன்னியின் செல்வன்” தந்த பொற்கால வெள்ளித்திரை இயக்குநர் மணிரத்னம் | பண்ணைபுரம் முதல் பாராளுமன்றம் வரை “இசைஞானி” இளையராஜா. | மாமன்னனே கடைசி : நல்ல படமாக அமைந்தது திருப்தி - உதயநிதி | தேவர் மகனுக்குப் பிறகு எனக்கு அருமையான படம் : வடிவேலு | 'ஜெயிலர்' படப்பிடிப்பு நிறைவு, கேக் வெட்டி கொண்டாட்டம் | வளர்ந்து வரும் நடிகருக்கு ஜோடியாகும் தமன்னா | விஜய்க்கு ஜோடியாகும் பிரியா பவானி சங்கர்? | கமலின் 234 வது படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகிறது | தங்கலான் படத்திற்காக பல பயிற்சிகளை பெற்ற மாளவிகா மோகனன் | ஆட்டோவில் சென்று ரசிகரின் அம்மாவிடம் உடல் நலம் விசாரித்த சூரி |
தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் இந்தியன்- 2 படத்தில் நடித்து வருகிறார் காஜல் அகர்வால். இந்நிலையில் ஏற்கனவே அவர் நடித்த கோஷ்டி என்ற படம் கடந்த மார்ச் 17ம் தேதி திரைக்கு வந்தது. அதையடுத்து தற்போது காஜல் அகர்வால் முக்கிய வேடத்தில் நடித்துள்ள ‛கருங்காப்பியம்' என்ற படம் ஏப்ரல் 7ம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் காஜல் அகர்வால் உடன் ரெஜினா, ஜனனி ஐயர், ரைசா வில்சன், கலையரசன், கருணாகரன் ஆகியோரும் முக்கியமான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். கார்த்திகேயன் இப்படத்தை இயக்கியுள்ளார். மேலும், காஜல் அகர்வால் கதையின் நாயகியாக நடித்து பல ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் பாரிஸ் பாரிஸ் என்ற படமும் அடுத்தபடியாக திரைக்கு வர தயாராகிக் கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.