பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

ராஜமவுலி இயக்கத்தில், கீரவாணி இசையமைப்பில், ஜுனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட், அஜய் தேவ்கன் மற்றும் பலர் நடித்து கடந்த வருடம் வெளியான படம் 'ஆர்ஆர்ஆர்'. அப்படம் வெளியாகி இன்றுடன் ஓர் ஆண்டு நிறைவடைந்துள்ளது.
படம் வெளியாகி ஒரு ஆண்டு நிறைவடைந்ததை படக்குழுவினர் மறந்துவிட்டார்கள் போலிருக்கிறது. படத்தின் தயாரிப்பு நிறுவனம் தவிர படத்தின் இயக்குனர் ராஜமவுலி, ஜுனியர் என்டிஆர், ராம் சரண் என படம் சம்பந்தப்பட்ட யாருமே அது குறித்து சமூக வலைத்தளங்களில் எந்த ஒரு பதிவையும் போடவில்லை.
ஆர்ஆர்ஆர் பட தயாரிப்பு நிறுவனமான டிவிவி, தங்களது டுவிட்டரில், ஆர்ஆர்ஆர் படம் இதுவரை வாங்கிய ஆஸ்கர், கோல்டன் குளோப் உள்ளிட்ட பல விருதுகளையும் குறிப்பிட்டு ஒரு போஸ்டராக வெளியிட்டுள்ளனர். மேலும், ‛‛ஆர்ஆர்ஆர் படம் வெளியாகி ஒரு வருடம் ஆகியும் இன்னும் உலகில் எங்காவது திரையரங்குகளில் ஹவுஸ்புல்களை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. எல்லா விருதுகளையும் விட இந்த உணர்வு பெரியது. நீங்கள் பொழிந்த அன்பிற்கு நாங்கள் நன்றி சொல்ல முடியாது'' என தெரிவித்துள்ளனர்.
சிறந்த ஒரிஜனல் பாடலுக்கான ஆஸ்கர் விருதை இந்தப் படத்தில் இடம் பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் பெற்றது. ஆஸ்கர் விருது வாங்கிய சமயத்தில் தொடர்ந்து பல்வேறு பதிவுகளைப் பதிவிட்ட ராஜமவுலி உள்ளிட்டோர் இப்போது எதுவும் போடாதது ஆச்சரியமாக உள்ளது. எல்லோரும் அவர்களது அடுத்தடுத்த வேலைகளில் பிஸியாகிவிட்டார்கள்.




