விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை | 20 வருடமாக நானும் ஹனிரோஸும் இப்போதும் பேச்சுலர்ஸ் தான் : உருகும் மலையாள நடிகர் |
சிவகார்த்திகேயன் நடித்து வந்த மாவீரன் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் தொடங்கி உள்ளன. அதிதி ஷங்கர் நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் மிஷ்கின் வில்லனாக நடித்திருக்கிறார். இதையடுத்து கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்க போகிறார் சிவகார்த்திகேயன். அவரது 21 வது படமான இதை ராஜ்குமார் பெரியசாமி இயக்க, சாய் பல்லவி நாயகியாக நடிக்கிறார்.
இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை காஷ்மீரில் நடத்த திட்டமிட்டுள்ளனர். தற்போது விஜய்யின் லியோ படத்திற்காக காஷ்மீரில் படப்பிடிப்பு நடத்திவிட்டு சென்னை திரும்பியுள்ள அப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜை சந்தித்து அங்குள்ள வெப்பநிலை மற்றும் படப்பிடிப்பு நடத்துவதற்கு ஏதுவான சூழல் ஆகியவை குறித்து கருத்து கேட்க திட்டமிட்டுள்ளார்கள். அவர்கள் கூறும் தகவலை பொருத்தே சிவகார்த்திகேயனின் 21வது படப்பிடிப்பை உடனடியாக காஷ்மீரில் நடத்துவதா? இல்லை சற்று கால தாமதம் செய்து நடத்துவதா? என்பது குறித்து இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி முடிவு எடுப்பார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.