'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி | மிக விரைவில் 100 மில்லியனைத் தொட்ட 'மோனிகா' | பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா |
சாந்தனு, ஆனந்தி நடித்துள்ள 'இராவண கோட்டம்' படத்தை 'மதயானை கூட்டம்' படத்தை இயக்கிய விக்ரம் சுகுமாறன் இயக்கி உள்ளார். இந்த படத்தை துபாய் தொழிலதிபர் கண்ணன் ரவி தயாரித்துள்ளார். இதனால் இதன் பாடல் வெளியீட்டு விழா துபாயில் நடந்தது. இந்த விழாவில் தமிழக அமைச்சர் துரைமுருகன், இயக்குனர் கே.பாக்யராஜ், வெங்கட் பிரபு, நடிகர்கள் பார்த்திபன், நாசர், பிரசன்னனா, நடிகைகள் குஷ்பு, மீனா, ராதிகா, ஆண்ட்ரியா, இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் இயக்குனர் விக்ரம் சுகுமாறன் படம் பற்றி பேசியதாவது : இந்த படம் ராமநாதபுரம் பகுதியில் உள்ள கருவேலங்காட்டு அரசியலை பேசும் படம். கொடூரமான வெயிலில் கருவேலங்காட்டிலேயே படமாக்கினோம். 1957ம் ஆண்டு நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாகி உள்ளது. சாந்தனு உயிரைக் கொடுத்து நடித்துள்ளார். இந்த படம் அவரது கேரியரில் முக்கியமானதான இருக்கும்.
நன்றாக நடிக்க தெரிந்த நடிகை வேண்டும் என்பற்காக ஆனந்தியை தேர்வு செய்து நடிக்க வைத்திருக்கிறேன். படத்தின் பட்ஜெட் நிர்ணயித்ததை விட அதிகமானது. அதையும் தயாரிப்பாளர் ஏற்றுக் கொண்டார். இராவணன் என்ற தலைப்பு நெகட்டிவாக இருக்கிறது என்றார்கள். அதை தாண்டி இந்த படம் இவ்வளவு தூரம் வந்திருக்கிறது. என்றார்.