ரஜினி, கமல் இணையும் படத்தை இயக்குகிறேனா? : பிரதீப் ரங்கநாதன் சொன்ன பதில் | அஜித் 64வது படத்தில் இயக்குனர் சரண் பணியாற்றுகிறாரா? | காந்தாரா சாப்டர் 1 கிளைமாக்ஸ் சவால்களை வெளியிட்ட ரிஷப் ஷெட்டி | பிரியங்கா மோகனின் ‛மேட் இன் கொரியா' | பாலாஜி மோகன், அர்ஜுன் தாஸ் இணையும் ‛லவ்' | சூரியை கதாநாயகனாக வைத்து படம் இயக்கும் சுசீந்திரன் | கோர்ட் ஸ்டேட் vs நோ படி படத்தின் தமிழ் ரீமேக் புதிய அப்டேட் | 2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? |
பார்த்திபன், தேவயானி நடிப்பில், 'நினைக்காத நாளில்லை', 'தீக்குச்சி' மற்றும் தெலுங்கில் 'அக்கிரவ்வா' ஆகிய படங்களை தொடர்ந்து, இயக்குனர் ஏ.எல்.ராஜா இயக்கியுள்ள புதிய படம் 'சூரியனும் சூரியகாந்தியும்'. டி.டி.சினிமா ஸ்டுடியோ சார்பில் உருவாகும் இந்தப் படத்தில் அப்புக்குட்டி, ஶ்ரீ ஹரி, விக்ரம் சுந்தர் மூவரும் கதையின் நாயகர்களாக நடிக்கிறார்கள். ரிதி உமையாள் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் இயக்குனர் சந்தான பாரதி, இயக்குனர் செந்தில் நாதன், குட்டிப்புலி வில்லன் ராஜசிம்மன் ஆகியோர் நடிக்கிறார்கள். திருவாரூர் ராஜா ஒளிப்பதிவு செய்கிறார், ஆர்.எஸ்.ரவிபிரியன் இசை அமைக்கிறார்.
“நாகரீகம் வளர்ந்தாலும் ஜாதி ஒழியவில்லை. செல்போன் நாகரீக வளர்ச்சி என்றால் அதிலும் ஜாதியைத்தான் வளர்க்கிறார்கள். முன்பை விட இப்போது ஜாதி அதிக கொடூரமாக வளர்ந்திருக்கிறது. சாதிக்க துடிக்கிற ஒரு இளைஞனை ஜாதி எப்படியெல்லாம் தடுக்கிறது. அதை அந்த இளைஞன் எப்படி உடைத்து முன்னேறுகிறான் என்பதை சொல்லும் படம் இது” என்கிறார் இயக்குனர் ராஜா.