'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
நடிகர் சிலம்பரசன் நடிப்பில் உருவாகி ரிலீஸ்க்கு தயாராகி வரும் படம் பத்து தல. இயக்குனர் ஒபிலி கிருஷ்ணா இயக்கியுள்ளார். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்த இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. சிம்பு உடன் கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கவுதம் மேனன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நடிகை சாயிஷா ஒரு பாட்டுக்கு ஆடி உள்ளார். இந்த படத்தில் ஏ.ஜி.ஆர் எனும் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் நடிகர் ரஜினிகாந்தை தான் அணுகினார்களாம். ஆனால் அவர் இது ரீமேக் படம் என கூறி நடிக்க மறுத்துவிட்டாராம்.
அதன் பின்னர் தான் இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு சிம்புவிற்கு சென்றது என படத்தின் தயாரிப்பாளர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். பத்துதல திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. சிம்பு நடித்த படங்களிலேயே இந்த பட டிரைலருக்கு தான் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.