மாமன்னனே கடைசி : நல்ல படமாக அமைந்தது திருப்தி - உதயநிதி | தேவர் மகனுக்குப் பிறகு எனக்கு அருமையான படம் : வடிவேலு | 'ஜெயிலர்' படப்பிடிப்பு நிறைவு, கேக் வெட்டி கொண்டாட்டம் | வளர்ந்து வரும் நடிகருக்கு ஜோடியாகும் தமன்னா | விஜய்க்கு ஜோடியாகும் பிரியா பவானி சங்கர்? | கமலின் 234 வது படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகிறது | தங்கலான் படத்திற்காக பல பயிற்சிகளை பெற்ற மாளவிகா மோகனன் | ஆட்டோவில் சென்று ரசிகரின் அம்மாவிடம் உடல் நலம் விசாரித்த சூரி | மீண்டும் தனுஷூக்கு ஜோடியாக த்ரிஷா? | உங்கள் நண்பர் வைரமுத்து மீது எப்போது நடவடிக்கை எடுப்பீங்க... முதல்வருக்கு பாடகி சின்மயி வேண்டுகோள் |
தெலுங்குத் திரையுலகத்தின் அதிரடி ஆக்ஷன் ஹீரோ பாலகிருஷ்ணா. அவரது படங்களைப் பற்றி பலரும் கிண்டலடித்து விமர்சனம் செய்வார்கள். ஆனால், பாலகிருஷ்ணா நிஜத்தில் மருத்துவம் சார்ந்த பல்வேறு உதவிகளை இலவசமாக வழங்கி வருபவர் என்பது இங்குள்ள பலருக்குத் தெரியாது.
அவர் சேர்மன் ஆக இருக்கும் பசவதாரகம் மருத்துவமனையில் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளித்து வருகிறார். அடுத்து இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகளுக்கும் மருத்துவ சிகிச்சை அளிக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
சமீபத்தில் அவரது அண்ணன் மகன் தாரகரத்னா இதய நோயால் பாதிக்கப்பட்டு 40 வயதிலேயே மரணமடைந்தார். “இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு அனைத்து அறுவை சிகிச்சையும் இலவசம்,” என பாலகிருஷ்ணா அறிவித்துள்ளார். ஐதராபாத்தில் உள்ள பசவதாரகம் மருத்துவமனை மற்றும் இந்துப்பூரில் பாலகிருஷ்ணா கட்டியுள்ள மருத்துவமனையில் இந்த இலவச சிகிச்சைகள் வழங்கப்படும்.
மேலும், இந்துப்பூரில் உள்ள மருத்துவமனை கட்டிடத்தில் ஒரு பிளாக்கிற்கு தாரகரத்னா பெயரையும் வைக்க உள்ளதாக அறிவித்துள்ளார். ஏழைகளுக்கு இலவச சிகிச்சைக்காக மருத்துவ உபகரணங்கள் வாங்க ஒரு கோடியே 30 லட்ச ரூபாய் வழங்க உள்ளதாகவும், நோயால் பாதிக்கப்பட்டு ஏழை குழந்தைகளுக்காக இலவச மருந்துகள் மற்றும் இலவச சாப்பாடுகள் வழங்கப்படும் என்றும் பாலகிருஷ்ணா தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.