ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
கடந்த ஆண்டு வெளியான மலையாளப் படம் 'ஜெய ஜெய ஜெய ஜெய ஹே'. சதாரணமாக வெளியாகி அசாதாரணமான சாதனை படைத்த படம். சுமார் 5 கோடியில் உருவான படம் 50 கோடிக்கு மேல் வசூலித்தது. கணவனின் கொடுமை தாங்க முடியாத மனைவி ஒரு நாள் சிங்கமென எதிர்த்து நின்றால் என்ன ஆகும் என்பதுதான் படத்தின் கதை.
விபின் தாஸ் இயக்கத்தில் பசில் ஜோசப், தர்ஷனா ராஜேந்திரன், அஜு வர்கீஸ் உள்ளிட்டோர் நடித்த இப்படதிற்கு அங்கிட் மேனன் இசையமைத்திருந்தார். ஓடிடி வெளியீட்டின் மூலம் பலதரப்பு ரசிகர்களை சென்றடைந்த இந்த படத்தை தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்ய ஆமீர்கான் முடிவு செய்திருக்கிறார்.
மலையாளத்தில் படத்தை இயக்கிய விபின் தாஸே ஹிந்தியில் இயக்குகிறார். மேலும், தர்ஷனா ராஜேந்திரன் நடித்த கேரக்டரில் 'தங்கல்' பட புகழ் நடிகையும், தற்போது ஆமீர்கானுக்கு நெருக்கமான தோழியாக இருப்பவருமான பாத்திமா சனா ஷேக் நடிக்கிறார். இதுபற்றிய முறையான அறிவிப்புகள் விரைவில் வெளியாக இருக்கிறது.