கை கோர்ப்போம் துயர் துடைப்போம் : நடிகர் விஜய் அறிவுறுத்தல் | வெள்ளத்தில் சிக்கிய நடிகை நமீதா, குழந்தைகளுடன் பத்திரமாக மீட்பு | அலட்சியம், பேராசை, தவறான நிர்வாகம் - சந்தோஷ் நாராயணன் | புது தொடரில் என்ட்ரி கொடுக்கும் ஷெரின் ஜானு | சென்னை பெருவெள்ளத்தில் சிக்கி தவித்த கனிகா மீட்பு | தி கேர்ள் பிரண்ட் படப்பிடிப்பில் இணைந்த ராஷ்மிகா | பைட்டர் படத்திலிருந்து ஹிர்த்திக் போஸ்டர் வெளியானது | ஸ்டார் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் இதோ | ஹாய் நான்னா படக்குழு புதிய முயற்சி | அமீர்கான், விஷ்ணு விஷாலுக்கு உதவிய அஜித் |
பாலிவுட் நடிகர் சல்மான்கான் சர்ச்சைக்கு பெயர்போனவர். அவருக்கு அவ்வப்போது கொலை மிரட்டல்களும் வருவதுண்டு. தற்போது அவருக்கு மீண்டும் கொலை மிரட்டல் வந்துள்ளது. இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சல்மான்கான் மானேஜருக்கு கடந்த 18ம் தேதி இமெயில் மூலம் ஒரு கடிதம் வந்துள்ளது. அதில் பிரபல தாதா கோல்டி பிரர், சல்மான்கானுடன் பேச வேண்டும், இல்லாவிட்டால் அவரது உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்கிற தொணியில் அந்த கடிதத்தில் கூறப்பட்டிருந்தது. இந்த கடிதம் கோல்டி பிரரின் கனடா நாட்டு கூட்டாளியிடமிருந்து வந்துள்ளது. இது தொடர்பாக சல்மானின் மானேஜர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்த மிரட்டலை தொடர்ந்து சல்மான்கானுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.