இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் |
ராணி முகர்ஜி நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் 'மிசஸ் சாட்டர்ஜி வெசஸ் நார்வே'. ஆஷிமா சிப்பர் இயக்கியிருக்கும் இந்தப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அண்மையில் கூட சூர்யா இந்த படத்தை பார்த்துவிட்டு தனது டுவிட்டரில் படத்தை பார்த்து கண்ணீர் விட்டதாக தெரிவித்திருந்தார்.
படத்தின் கதை இதுதான். ஒரு பெங்காலி தாய், நார்வே நாட்டில் கணவருடன் வசித்து வரும்போது தன்னுடைய குழந்தைகளை பராமரிப்பதில் நார்வே நாட்டு சட்ட திட்டத்தை கடைபிடிக்கவில்லை என்று கூறி, அவரிடமிருந்து குழந்தையை பறித்து நார்வே நாட்டு அதிகாரிகள் காப்பகத்தில் வைக்கிறார்கள். இந்தக் குழந்தைகளை இந்திய அரசின் உதவியோடு சட்டப் போராட்டம் நடத்தி அந்த தாய் தன் குழந்தைகளை எப்படி மீட்கிறார் என்பதுதான் படத்தின் கதை. அந்த தாயாக ராணி முகர்ஜி நடித்திருந்தார்.
படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், நார்வே நாட்டின் தூதரக அதிகாரிகள் படத்தைப் பார்த்து விட்டு தங்கள் நாட்டின் சட்டம் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறியிருக்கிறார்கள். “ஒரு தாய் தன் கையால் குழந்தைக்கு உணவு கொடுப்பதையும், தன்னோடு படுக்க வைப்பதையும் நார்வே சட்டம் தடுக்கவில்லை. ஆனால் அப்படி சித்தரிப்பது நார்வே நாட்டு சட்டதிட்டத்தை அவமானப்படுத்துவதாகும்” என்று கூறியிருக்கிறார்கள்.
இந்தியாவுக்கான நார்வே தூதர் ஹான்ஸ் ஜேக்கப் தனது டுவிட்டரில் “மிசஸ் சட்டர்ஜி வெசஸ் நார்வே படம் குறித்த விமர்சனங்களை படித்தேன். குடும்ப வாழ்க்கை குறித்த நார்வேயின் கலாச்சாரம், பாதுகாப்பு, நம்பிக்கையை பற்றி படம் தவறாக சித்தரிக்கிறது. குழந்தை நலன் மிகப்பெரிய உந்துதல் விஷயம். அதை பணத்தால் தீர்மானிக்க முடியாது” என்று தெரிவித்திருக்கிறார்.