நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் ரிலீஸ் தேதி அறிவிப்பு | மலையாள இயக்குனருடன் இணையும் சூர்யா | நான் பத்தாம் வகுப்பு பெயில் - கத்ரீனா கைப் | சித்தார்த் கைவசம் 8 புதிய படங்கள் | ‛‛நாங்கள் பரம எதிரிகள் கிடையாது. ஆனால்...'': தனுஷ் பற்றி மனம்திறந்த நயன்தாரா | 5 மொழிகளில் வெளியாகும் அய்யப்பன் படம் | பிளாஷ்பேக் : மோகனை முழுமையான ஹீரோவாக்கிய 'கிளிஞ்சல்கள்' | சீரியல் நடிகை கீதாஞ்சலிக்கு ஆண் குழந்தை! குவியும் வாழ்த்துகள் | புஷ்பா 2 - தமிழகத்தில் 50 கோடி வசூல் | தன் மீதான வழக்கை ரத்து செய்ய அல்லு அர்ஜுன் மனு |
ரிஷப் ஷெட்டி இயக்கம், நடிப்பில் கடந்தாண்டு வெளிவந்த கன்னடப் படம் 'காந்தாரா'. அப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் ஆகி வெளியாகியது. சுமார் 15 கோடி ரூபாய் செலவில் தயாரான படம் 400 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்தது.
கடலோரக் கர்நாடகாவில் பேசப்படும் துளு மொழியிலும் இப்படம் டப்பிங் ஆகி தியேட்டர்களில் வெளியானது. கடந்த மாதம் இப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் ஆங்கிலத்திலும் டப்பிங் செய்து வெளியிட்டுள்ளது.
அடுத்து இப்படத்தை இத்தாலி மற்றும் ஸ்பானிஷ் மொழிகளில் டப்பிங் செய்து தியேட்டர்களில் வெளியிட உள்ளார்கள். அது பற்றிய போஸ்டருன், இத்தாலி மொழியில், “சர்வதேச ரசிகர்களின் கோரிக்கைக்கு நன்றி. 'காந்தாரா' படத்தை இத்தாலி மற்றும் ஸ்பானிஷ் மொழிகளில் டப்பிங் செய்கிறோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்,” என ரிஷப் ஷெட்டி பதிவிட்டுள்ளார்.
ஒரு கன்னடப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், துளு, ஆங்கிலம், இத்தாலி, ஸ்பானிஷ் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்படுவது அத்திரையுலகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளது.