தொடர்ந்து நாயகிகளுக்கு ‛ரம்யா' பெயர்: ஆதிக் ரவிச்சந்திரனின் ‛சென்டிமென்ட்' | “தம்பி கலக்கிட்டான்” - ‛மிஸ்டர் எக்ஸ்' கவுதம் கார்த்திக்கு ஆர்யா பாராட்டு | மெகா பட்ஜெட்டால் கிடப்பில் போடப்பட்ட பயோபிக் படம் | டோலிவுட் நடிகர்களிடம் சரண்டர் ஆன நடிகை | சினிமாவிலும் சிறகடிக்க ஆசை: மனம் திறக்கும் கோமதி பிரியா | ஹாலிவுட் படங்களில் நடிக்க ஆசைப்படும் ராஷி கண்ணா | 9 வயதிலேயே பேட் டச்! நேஹா கவுடா சந்தித்த கொடூரம் | ஜி.வி பிரகாஷ் - சைந்தவி விவாகரத்துக்கு நான் காரணமா? மனம் திறந்த திவ்யபாரதி | அடுத்தடுத்து இரண்டு சீரியல்களில் கமிட்டான ஷோபனா | ரஜினியின் கூலி படம் மே மாதம் ரிலீஸ்? |
விடாமுயற்சி படத்திற்குப் பிறகு நடிகர் அஜித்தின் ‛குட் பேட் அக்லி' படம் வரும் ஏப்.,10ம் தேதி வெளியாக உள்ளது. சினிமாவில் நடித்து வந்த அஜித், கடந்த சில தினங்களாக கார் ரேஸில் ஆர்வம் காட்டி வருகிறார். அண்மையில் துபாயில் நடந்த கார் ரேஸில் அஜித்தின் அணி 3வது இடத்தை பிடித்தது. இந்த ரேஸில் அஜித்தின் கார் விபத்துக்குள்ளானது. அதில் காயமின்றி அவர் தப்பினார்.
இதைத் தொடர்ந்து, ஸ்பெயினின் வாலென்சியா நகரில் நடந்த ரேஸில் அஜித் கலந்து கொண்டார். கடந்த சில தினங்களாக பயிற்சியில் ஈடுபட்ட வந்த அவர், தற்போது ரேஸில் பங்கேற்றார். ரேஸின் போது குறுக்கே வந்த ஒரு காரால், அஜித் ஓட்டிச் சென்ற கார் விபத்துக்குள்ளானது. இதில், அவரது கார் 3 முறை சுழன்றடித்தது. இருப்பினும், அவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். லேசான காயம் ஏற்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
அஜித்தின் கார் விபத்துக்குள்ளான வீடியோ சமூகவலைதளங்களில் பரவி வரும் நிலையில், அதனை பார்க்கும் அஜித் ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளனர்.