சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

ஆடுகளம் திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக வெள்ளாவி வைத்து வெளுத்த பெண்ணாக நடித்து தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை டாப்ஸி. இந்த பதினைந்து வருடங்களில் மிகப்பெரிய அளவில் தனது கேரியரில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். குறிப்பாக கதாநாயகனுடன் டூயட் பாடும் கதாபாத்திரங்களை ஒதுக்கி வைத்துவிட்டு நடிப்புக்கு முக்கியத்துவம் தரும் கதையின் நாயகியாக படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அதிலும் விளையாட்டு வீராங்கனைகளின் பயோபிக்குகளில் அதிக ஆர்வம் காட்டி நடித்து வரும் டாப்ஸி அதற்காக இன்றளவும் தனது உடல் எடையை, உடல் அமைப்பை கச்சிதமாக மெயின்டன் செய்து வருகிறார்.
இதற்கென தனியாக டயட்டீசியன் ஒருவருக்கு மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் கொடுத்து தனது உடல் எடையையும் ஆரோக்கியத்தையும் சரியாக பேணி காத்து வருவதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் டாப்ஸி. இதைக் கேட்டால் இவ்வளவு பணம் செலவு செய்கிறாயா என்று தனது தந்தை திட்டுவார் என வேடிக்கையாக கூறியுள்ள டாப்ஸி, பின்னாளில் பெரிய அளவில் மருத்துவமனைக்கு செலவு செய்வதற்கு பதிலாக இப்போது அதில் ஒரு பகுதியை டயட்டீஷியனுக்கு சம்பளமாக ஒதுக்குவதில் தப்பில்லை என்றும் கூறியுள்ளார் டாப்ஸி.




