ஆதிபுருஷ் படத்திற்காக 10 ஆயிரம் டிக்கெட்டுகளை கொடுக்கும் ரன்பீர் கபூர்! | லியோ படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர் டென்சில் ஸ்மித் | சாண்டி படத்திற்கு இசையமைக்கும் இளையராஜா | விக்ரம் படத்தை வெளியிடும் விஜய் பட தயாரிப்பாளர்! | தமிழ் படங்களுக்கு நோ சொன்ன இளம் நடிகை | புருவ அழகுக்கு ஞாபக மறதி : அறிமுகப்படுத்திய இயக்குனர் தாக்கு | ராமனாக நடித்தது அதிர்ஷ்டம் - பிரபாஸ் | விஜய் பிறந்த நாளில் வெளியாகும் இரண்டு அப்டேட் | கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஸ்வாரா பாஸ்கர் | மேகா ஆகாஷ் திருமண செய்தி உண்மையல்ல... |
‛புது நெல்லு புது நாத்து' படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரும், பாரதிராஜாவிடம் பல ஆண்டுகள் தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றியவருமான சி.என்.ஜெய்குமார் வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். சென்னை, செனாய் நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டது. பாரதிராஜா நேரில் சென்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். பின் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அவருடன் அவரது மகனும், நடிகருமான மனோஜ், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், தயாரிப்பாளர்கள் தாணு, சித்ரா லட்சுமணன், முரளி உள்ளிட்ட திரைப்பிரபலங்களும் அஞ்சலி செலுத்தினர். ஏ.சி சண்முகத்தின் உறவினர் ஜெய்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.