ஜேசன் சஞ்சய், சந்தீப் கிஷன் பட ரிலீஸ் எப்போது? | எங்களை பிரித்தது அந்த மூன்றாவது நபரே : கெனிஷாவை சாடும் ஆர்த்தி ரவி | ஹிந்தி பட ரீமேக்கில் நடிக்கும் துருவ் விக்ரம் | சந்தானத்தை பின்னுக்கு தள்ளிய சூரி | அமெரிக்காவில் தெலுங்கு கலாச்சார விழாவில் பங்கேற்கும் அல்லு அர்ஜுன் | ''எல்லாமே முதன்முறை... பிகினியும் கூட...'': 'வார் 2' பற்றி கியாரா அத்வானி | மணிரத்னம் படத்தில் ருக்மணி வசந்த் | ஆதி படத்தில் இணையும் மிஷ்கின்? | மே 23ம் தேதியிலும் அதிகப் படங்கள் ரிலீஸ் | வழக்கமான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்பவில்லை : பிக்பாஸ் அர்ச்சனா |
ஹாலிவுட் இயக்குனர்களில் மிகவும் வித்தியாசமானவர் குவென்டின் டாரன்டினோ. இவரது முதல் படமான 'ரிசர்வயர் டாக்' 1992ம் ஆண்டு வெளிவந்து பெரும் வெற்றி பெற்றது. அப்போது அவர் “நான் 10 படங்கள் மட்டுமே இயக்குவேன், 60 வயதில் சினிமாவை விட்டு விலகி விடுவேன்” என்று அறிவித்தார். அதன்பிறகு பல்ப் பிக்சன், ஜாக்கி பிரவுன், கில்பில், டைத் ப்ரூப், இக்கோரியஸ் பாஸ்டர்ஸ், டிஜான்ங்கே அன்செயின்டு, தி ஹார்ட்புட் எய்ட், ஒன்ஸ் அபான்ய எ டைம் இன் பாலிவுட் ஆகிய படங்களை இயக்கினார்.
இந்த நிலையில் தனது பத்தாவது படமாக 'தி மூவி கிரிட்டிக்' என்ற படத்தை அறிவித்துள்ளார். 1970ல் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் வாழ்ந்த பாலின் கேல் என்ற திரைப்பட விமர்சகர் மற்றும் நாவலாசிரியையின் வாழ்க்கையை மையப்படுத்தி படத்தை டாரன்டினோ உருவாக்குகிறார் என்கிறார்கள்.
இவரது படங்கள் நான் லீனியர் திரைக்கதை, ரத்தம் தெறிக்கும் ஆக்ஷன், டார்க் காமெடி அம்சங்களை கொண்டதாக இருக்கும், இதற்கென தனி ரசிகர் பட்டாளமும் உண்டு. அவருக்கு வயதும் 60வதை நெருங்குவதால் இது அவரது கடைசி படம் என்கிறார்கள்.